உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

  • மறைமலையம் 22

இனித், திருவிளையாடலிற் சொல்லப்பட்ட வரகுண பாண்டியன் தன்னை வந்தெதிர்த்த சோழனொடு போர் புரியச் சென்றக்கால் தனது திருமேனி யெங்குந் திருநீறணிந்து சென்று போர்க்களத்தே நின்றனனாக அவன் மேற் பகைவன் ஏவிய கணைகள், இறைவனது அருள் நடுவில் வைகிய அவனுக்கு ஏதஞ் செய்யமாட்டாமல் அவன்றன் அடிகளிலே வந்து வீழ்ந்தன வென்று நம்பியாண்டார் நம்பி அருளிச்செய்த. “பொடியேர் தருமே னியனாகிப் பூசல் புகஅடிக்கே

கடிசேர் கணைகுளிப் பக்கண்டு கோயிற் கருவியில்லா வடியே படஅமை யுங்கணை யென்ற வரகுணன்றன் முடியே தருகழல் அம்பலத் தாடிதன் மொய்கழற்கே”

தனை

என்னுங் ‘கோயிற் றிருப்பண்ணியர் விருத்தத்தை’ எடுத்துக் காட்டிய ‘தமிழ்வரலாறுடையார்' பின்னர்த் தாங் கூறிய மறந்து, போர்புரிதலிற் கருத்தில்லா மெய்யன்பனான பழைய வரகுண பாண்டியனையும், போர் வெறியே கொண்டலைந்த பின்னை வரகுண பாண்டியனையும் ஒன்று படுத்திய வழுவுரை அறிவுமிக்க சான்றோர் கண்டு இரங்கற்பால தொன்றாயிற்று.

இனித், திருவிளையாடலிற் சொல்லப்படும் வரகுணன், தன்மேற் படையெடுத்துவந்த சோழமன்னனை இறைவனரு ளால் வெற்றிகண்டபிற் சிவபிரான் றிருவடிக்கண் மேலுமேலும் மிக்கெழுந்த பேரன்பின் வழியனாய்த் திருவிடைமருதூரிற் றிருக்கோயிற் றொண்டுபுரிந்து சிலகாலம் வைகியும், அதன்பிற் றில்லைச் சிற்றம்பலத்தே கடவுளை வணங்கிச் சிலகால மிருந்தும், அதன்பிற் றன் மதுரைமா நகர் சென்று சிவபிரான் அடியார்பொருட்டு நிகழ்த்திய அருட்செயல்களை விரித்தோதும் அருள் நூல்களையே ஆராய்ந்திருந்தும் அன்பிற் பெருகிச் சிவவுலக மெய்தினானென்று நம்பியார் திருவிளையாடல் கூறாநிற்கும்.5 இதனாற், சோழனைத் துரத்தியபின் இவ் வரகுண பாண்டியன் தன்னாட்சியைத் தன் மகன்மேலேற்றித் தான் தவநெறி சார்ந்தமை தேற்றாம். இவ் வரகுணபாண்டியனுக்கு மகன் ஒருவன் இருந்து அரசு சலுத்தினானென்பது, நம்பியார் ‘விடைக்குறி யம்பெய்த திருவிளையாடல்' முதற்செய்யுளி லேயே கூறியிருக்கின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/329&oldid=1587888" இலிருந்து மீள்விக்கப்பட்டது