உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

ஆகாதெனக்

.

மறைமலையம் - 22 கூறிப்பிறரை மறுக்கும்

'தமிழ்வரலாறு' உடையார். இம் மறுப்பு மாணிக்கவாசகர் காலத்திருந்த வரகுணனையும் பிற்காலத்திருந்த வரகுணனையும் வெறும் பெயரொப்புமை பற்றி ஒன்றுபடுத்த முனைந்த தம்மையுஞ் சாருமென அறியாத தென்னையோ! பிறரை மறுக்குங் கால் ஒருவாறாகவும், தாம் ஒன்றை யெழுதுங்காற் பிறிதொரு வாறாகவும் முறையிகந்து செய்தல் நடுவு நிலைமையாகாதென் றுணர்க. று

க்

அற்றேற், பழைய வரகுணபாண்டியனைப் போலவே பிற்காலத்தவனான இரண்டாம் வரகுணனும் சிவபிரான் மாட்டு அன்புடையனென்பது அவன் வெட்டுவித்த அம்பா சமுத்திரக் கல்வெட்டினாற் புலப்படுதலின், அதுபற்றி அவ் விருவரையும் ஒருவரென்றலாற் போதரும் இழுக்கென்னையெனிற்; பழைய வரகுணபாண்டியன்றன் அன்பின் செயல்களை மேலே விரிவாக எடுத்துக்காட்டினாம்; அச் செயல்களுள் ஒன்றாயினும் அம்பாசமுத்திரக் கல்வெட்டிற் குறிக்கப்படவில்லை. இக் கல்வெட்டிற்குரிய வரகுணன் தொண்டை நாட்டிற் பெண்ணை யாற்றங் கரைமேலுள்ள அரசூரிற்போய்ப் பாசறையிலிருந்த போது முள்ளிநாட்டைச் சேர்ந்த இளங்கோக் குடியிலுள்ள திருப்போத்துடையாராகிய சிவபிரானுக்கு நான்கு காலமும் வழிபாடு நடப்பித்தற்பொருட்டு அவ்வூர் மன்றத்தார் கையில் இருநூற்றுத் தொண்ணூறு காசுகொடுத்து அக் காசுக்கு வரும் வட்டியைக்கொண்டு அவ் வழிபாடு நடப்பிக்கும் வகைகளை கல்வெட்டிற் பொறிக்கச் செய்திருக்கின்றனன்.29 வளவே யல்லாமல், அக் கல்வெட்டினால் அறியற்பாலது வேறேது மில்லை.

அக்

அக்

தமிழ்வேந்தர்கள்

காலத்திருந்த ங்ஙனஞ் சிவபிரான் திருக்கோயில் வழிபாட்டிற்காகப் பொருள் நல்குதலும் இறையிலியாக நிலங்கள் விடுதலும் வழக்கம். சிவபிரான் திருக்கோயிலுக்கேயன்றித் திருமால் கோயிற்கும், பௌத்தர் சமணர் பாழிகட்கும் இங்ஙனங் கொடை கொடுத்திருக் கின்றார்கள். அவ்வத் தெய்வங்களின் பழைய கோயில்களைப் புதுக்கியும், கோயில் இல்லாதவற்றிற்குப் புதுக்கோயில்கள் எடுப்பித்தும் வந்திருக்கின்றார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/341&oldid=1587908" இலிருந்து மீள்விக்கப்பட்டது