உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 1

மாணிக்கவாசகர்

309

அறுபத்துமூன்று நாயன் மார்களில் ஒருவரான கோச்செங்கட் சோழர் திருமாலுக்கும் பல கோயில்கள் எடுப்பித்தமையே யாங்கூறும் இவ் வுண்மைக்குச் சான்றாம். ஆகவே, சிவபிரான் திருக்கோயிலொன்றில் நாள்வழிபாடு செவ்வையாய் நடக்குமாறு பொருள்தந்து உதவினமை ஒன்றே கொண்டு பிற்காலத்திருந்த இவ் வரகுண பாண்டியனைச் சிவபிரான் மாட்டு அளவிறந்த அன்புடைய னெனக் கொண்டு, இவனே காலத்தவன் என்றல் பெரியதொரு பிழைபாடாய் முடியும். அல்லது, இவனும் சிறந்த சிவனடியா னன்றே கொள்ளினும், இவனையும் இவனையும் பழைய வரகுண பாண்டியனையும் ஒன்றுபடுத்துதற்கு ஏதொரு தொடர்புங் கண்டிலம். தன் அன்பின் மிகுதியாற் பழைய வரகுணன் செய்த செயல்களில் ஒன்றாயினும் இவ்வரகுணன் செய்த செயல்களுட் காணப்பட்டாலல்லாமல் இவ் விருவரையும் ஒருவராகக் கருதுதல் முற்றுந் தவறாமென்க. எனவே, பழைய வரகுணன் இவ் வரகுணனின் வேறாதல் தேற்றமாம் என்பது. பழைய வரகுணனைப் போல் இவன் அத்துணைப் பெரிய அன்பினன் என்பது அறிதற்கு வாயில்கள் இல்லையாயினும் இவனும் சிவபிரான்மாட்டு அன்புடையனா யிருக்கலாம்; அதுபற்றி இருவரும்

ஒருவராதல் யாங்ஙனம்? சிவபிரானிடத்து அன்புடையன் என்பது ஒரு சிறிது தெரிந்தவளவானே இவன் பழைய வரகுணனே யாவன் என்று கோடற்குச் சான்றுகள் யாவை? சான்றுகள் ஒருசிறிதுங் காணப்ப காணப்படாமையால் அங்ஙனங் கோடல் ஆகாதென்க. மாணிக்கவாசகர் காலத்து வரகுணன் பழைய காலத்தவன் ஆயின். 'வரகுணன்' என்னும் வடசொற்பெயர் தாங்கியிருத்தல் என்னை? பண்டைச் சேரசோழ பாண்டியர்களெல்லாரும் தூய தனித்தமிழ்ச் சொற்களால் ஆய பெயர்களல்லவோ புனைந்தவ ரெனின்; அற்றன்று. முதல் நூற்றாண்டுக்கு முற்பட்டவர்களே தூய தமிழ்ப்பெயர் புனைந்தோர் ஆவர்.

'சிலப்பதிகாரம்' ‘மணிகேலை' எழுதப்பட்டஇரண்டாம் நூற்றாண்டிலும், அதற்குமுன் நூற்றாண்டிலும் மெல்லிய தமிழ் ஓசையோடும் ஒத்த சிற்சில வடசொற்கள் தமிழின்கண் வந்து கலப்பவாயின. அங்ஙனம் வந்து கலந்தவற்றுள் ‘வரம்’ ‘குணம்’ என்பனவும் சேர்ந்தனவாம். 'சிலப்பதிகாரத்'தின் ஒரு பிரிவாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/342&oldid=1587909" இலிருந்து மீள்விக்கப்பட்டது