உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310

  • மறைமலையம் - 22

‘வரந்தருகாதை' என்பதன் பெயர் முதலில் ‘வரம்' என்னுஞ் சொல்லும். “இறைவன் குரவன் இயல்குணன் எங்கோன் (நாடுகாண்காதை. 184) என்பதிற் ‘குணன்' என்னுஞ் சொல்லும் வந்திருத்தல் காண்க. கடைச்சங்கத்தின் இறுதியில் இருந்த ‘உக்கிரப்பெருவழுதி' என்னும் வடசொல் வந்திருத்தலும் அறியற்பாற்று. 'அரிமர்த்தனன்’, ‘பராக்ரமன்’, ‘ஜடிலவர்மன்' என்பனபோல் வல்லோசை மிக்கு நிற்கும் வடசொற் பெயர்களே இரண்டு, மூன்று, நான்காம் நூற்றாண்டுகள் வரையில் தமிழில் வந்து வழங்காதனவாகும். வடக்கிருந்துவந்த வடுகக்கருநாடரது ஆட்சிக்குப் பின்னர்த் தான் வல்லோசை மிக்க வடசொற்களுந் தமிழில் வரலாயின. இனித் தமிழ்ப் புராணங்கள் கற்றாரிற் சிலர், பழைய வரகுண பாண்டியன் சிவபிரான்பாற் பேரன்புடை யனாகலாற், சம்பா அரிசியால் ஆக்கிய உணவை அவ்விறைவற்குப் படைத்து, அப்பெருமாற்குத் தகுதியான அவ்வரிசி யுணவைத் தானும் உணடல் பழுதெனக் கருதித், தான் வரகினால் ஆக்கிய உணவை உட்கொண்டு வந்தமைபற்றியே 'வரகுணன்' எனப் பெயர்பெறலானான் என்று கூறக்கேட்டேம். அஃது உண்மையாயின் ‘வரகுணன்’ என்னும் பெயர் 'வரகுஉணன்' எனப் பிரிந்து தூய தமிழ்ச் சொற்களாய் 'வரகை உணவாகக் கொள்பவன்' என்று பொருள் பயக்கும் என்க. எனவே. இச் சொற்பெயரை ஒரு கருவியாகக் கொண்டு ‘வரகுணனைப்' பிற்காலத்தவனாக்க முயல்வார் கருத்து நிரம்பாதென் றறிக. மேலாராய்ந்தவாற்றால் மாணிக்க வாசகர் காலத்திருந்தவனும், அவராற் குறிப்பிட்ட சிவபிரான் திருத்தொண்டனுமான வரகுண பாண்டியன். வடுகக் கருநாடர் மன்னன் மதுரையை வந்து கைப்பற்றுதற்குமுன், அஃதாவது நான்காம் நூற்றாண்டிற்குமுன், இருந்தோனாவன் என்பதூஉம். எனவே மாணிக்கவாசகப் பெருமானும் அந் நான்காம் நூற்றாண்டிற்கு முற்பட்டவராவர் என்பதூஉம் இனிது பெறப்பட்ட ன வென்க.

1.

2.

3.

அடிக்குறிப்புகள்

M. Jouveau - Dubreuil's 'The Pallavas' ch.1. Geiger's Mahavamsa, p. XXXVIII

The late Mr. V. Kanakasabhai Pillai's 'The Tamils Eighteen Hundred

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/343&oldid=1587910" இலிருந்து மீள்விக்கப்பட்டது