உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

18

23

தோன்றாது. கடவுளின் பேரறிவு விளக்கத்தினை அவனாற் படைக்கப் பட்ட புற்பூண்டுகள் முதல் மக்களுடம்பு ஈறாக வுள்ளவற்றிற் கண்டு கண்டு வியப்பார்க்கு அவ்வறிவுக் காட்சியில் ஒருவகை மகிழ்ச்சியுங் களிப்புந் தோன்றுமே யல்லாமல் அதனின் மேற்பட்ட மாறா இன்ப நிலை தோன்றாது. தமது சிறுமையுங் கடவுளின் பெருமையும் அறிந்து தமக்கு வேண்டுவன வெல்லாந் தந் தலைவன் பாற் கேட்க அறியாத என்பில்லாப் புழுமுதல் எல்லா உயிர்கட்குந் தானாகவே உளங்கனிந்து பல்வேறு வியத்தகு யாக்கை களையும் அவற்றின் நுகர்ச்சிக்குப் பல்வேறு வியத்தகு பண்டங்களையும் அமைத்து வைத்த முதல்வனின் அருட் பெருந்தகைமையினை ஆராய்ந்து நினையுந்தொறும் நினையுந் தொறும் அங்ஙனம் நினைவார்க்கு முன்னில்லாத ஓர் உள்ளக் கசிவும் ஓர் உள்ளக் களிப்புந் தோன்றுமேயல்லாமல், அதனின் மேற்பட்டு என்பெலாம் புரைபுரையுருக்கும் பேரின்ப நிலை தோன்றாது. இவ்வாறு நம்மனோர் தமது சிற்றறிவு முயற்சி கொண்டு எத்துணை தான் கடவுள் நிலையினை உணர்வாராயினும், அவர் அங்ஙனம் உணரும் உணர்ச்சிதான் றைவனை அண்முதற்கு ஒரு வழியினைத் தோற்றுவிக்குமே யல்லாமல், அவன்றன் உண்மை நிலையினை வருவித்துக் காட்டமாட்டாது. மற்றுத் தமது சிற்றறிவுமுயற்சி அவிந்து சிவத்தையே களைகணாய்ப் பற்றி ஏசற்றிருப்பார்க்கே, சிவம் தானே முனைந்து தோன்றித் தன் முழுமுதல் இன்ப விளக்கத்தை அவரது உள்ளத்தில் ஏற்றிவைத்துத், தன் உண்மைநிலை முற்றும் அவர்க்கு நன்கினிது புலனாமாறு செய்யும்.

இவ்வாறு, சிவம் தானேவந்து அருள்செய்யப் பெற்றார் தம்முள் மாணிக்கவாசகப் பெருமானோ தாம் பெற்ற அப்பெறலரும் பேற்றைத் தம்மைச் சார்ந்த எம்போல்வா ரெல்லாம் எளிதிற் பெற் றின்புற்றிருக்குமாறு தாம் திருவாய் மலர்ந்த திருவாசகச் செந்தமிழ் மாமறைவழியே வழங்கிய வள்ளன்மை யுடைய ராகலின், அவர் எம்மனோர்க்குத் தலைக்கணியாய் நிற்குந் தனிமுதன்மை யுடையரென்பது நினைவிற் பதிக்கற்பாற்று. மாணிக்கவாசகரைப் போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/56&oldid=1587502" இலிருந்து மீள்விக்கப்பட்டது