உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

அதன்பின்

  • மறைமலையம்

22

இருபஃதாண்டுகளாய்ப் பொதுவாகத் தமிழ்நூற் கால அளவைகளைப் பற்றியுஞ் சிறப்பாக மாணிக்கவாசகரிருந்த காலவரையைப் பற்றியும் அறிஞர் பலரால் எழுதி வெளியிடப்பட்ட கட்டுரைகளையும் நூல் களையுஞ் செவ்வனே ஆராய்ந்துபார்த்து, அவற்றுட் பொருந்துவனவும் பொருந்தாதனவு பொருந்தாதனவும் வேறுபிரித்துக் காட்டிப், பண்டைத் தமிழ்ப்பெரும் பனுவலாகிய தொல்காப்பியம் முதற் பின்றைத் தமிழ்ப் பேரறிவு நூலாகிய சிவஞான போதம் ஈறாக வந்த தென்னூல் வடநூல்களின் காலங்களையெல்லாம் வரையறை செய்து நிறுவி, அம் முகத்தால் மாணிக்கவாசகப் பெருமான் காலம் திருநாவுக் கரையர், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்திகள் முதலான சைவசமயாசிரியர் ஏனை மூவர் காலத்திற்கும் முன்னே கி.பி. மூன்றாம் நூற்றாண்டின்கண் மிளிர்வதாதலை இப்போது மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றோம். இங்ஙனம் யாம் எமது இளமைக்காலத்திலேயே இவ்வுண்மையைக் கண்டுணரு மாறு எமதுணர்வுக்கு உணர்வாய் நின்று விளக்கி, அதனை என்றும் நிலைபெறச் செய்த “சிற்றம்பலத்தெங்கள் செல்வப்” பெருமான் திருவடிகட்கு எமது புல்லிய வணக்கம் உரிய தாக! ஓம்சிவம். மறைமலையடிகள்

பல்லவபுரம்,

பொதுநிலைக்கழக நிலையம், திருவள்ளுவர் ஆண்டு 1960 மாசி, முதல்நாள் மாலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/73&oldid=1587519" இலிருந்து மீள்விக்கப்பட்டது