உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் “அரியகற்று ஆசற்றார் கண்ணுந் தெரியுங்கால் இன்மை யரிதே வெளிறு”

1

39

என்று அருளிச்செய்தமையானுந் தெளியப்படும். ஆகவே, அறிவில் மிகச் சிறந்த சான்றோர்களும் ஒரோவழிப் பிழை படுவராயின், அவர் செய்த அப் பிழைகளை உண்மை விளக்கத்தின் பொருட்டு எடுத்துக்காட்டுதல் அவர்பால் யாம் வைத்துள்ள அன்புக்கும் நன்கு மதிப்புக்கும் எள்ளளவும் பழுதுசெய்யாது. ஒரோவொருகாற் பேரறிவினர்பால் மெய்யல் லாதன தோன்றுதலுஞ், சிற்றறிவினர்பால் மெய்யாவன தோன்றுதலும் உலகியல் நிகழ்ச்சிகளிற் காணக்கிடத்தலின், உண்மையாராய்ச்சி செய்பவர்கள், அவ்வவர்தம் பெருமை சிறுமை பாராது, அவ்வவற்பாற் புலனாவனவற்றிலுள்ள பொய்ம்மை மெய்ம்மைகளை ஆராய்ந்து கண்டெழுதுதலே, உலகினை வஞ்சியாது அதற்கு நன்மைபயக்கும் விழுமிய ஒழுக லாறாம்; இது தேற்றுதற்கன்றோ ஆசிரியர் திருவள்ளுவனாரும்,

66

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு”

நில்லாது,

66

என்று அருளிச் செய்வாராயினர்? இவ்வாறு உண்மையைக் கண்டெழுதுதலிற் கடைப்பிடியாய் இவர் தெய்வத்தன்மை வாய்ந்த ஆசிரியர்; இவரியற்றிய இந் நூலிற் குற்றங் குறையாவது ஏதும் இராது” என்று குருட்டுப் பிடியில் உறைத்துநின்று, தாமும் அவர் நூற்பொருளை யாராயாது, ஆராய்வார் சிலர் தம்மையுங் கண்டவாறு புறம் பழித்துப் பேசி உலகினை அறியாமையில் அழுத்துவாரும் உளர்; அத்தன்மையினாருரைகளை ஒருபொருட்டாக

வையாது, மெய்மையாராய்ச்சியிற் செல்லுதலே உலகினைத் தேற்றுஞ் சான்றோர் கடனாமென்க,

மாணிக்கவாசகப் பெருமான் இருந்த காலம் இற்றைக்கு ஆயிரத்து எழுநூறு ஆண்டுகட்குமுன், அஃதாவது கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதிக்குட்படுவதா மென்பதனை, இருபத்தேழு ஆண்டுகட்குமுன் வெளிவந்த ஞானசாகர முதற் பதுமத்தின்கண் வெளியான ‘மாணிக்கவாசகர்கால நிருணயம்’ என்னுங் கட்டுரையில் நன்கு விளக்கினேம். அக்கட்டுரையும் இந் நூலின் இறுதியிற் சேர்க்கப்பட்டிருக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/72&oldid=1587518" இலிருந்து மீள்விக்கப்பட்டது