உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

1. மாணிக்கவாசகர் பிறப்பு

பாண்டி நாட்டில் வைகையாற்றங்கரையில் உள்ள திருவாதவூரின்கண் மானமங்கலத்தில் மறையோதும் ஓர் அந்தணர் குடியில் மாணிக்கவாசகப் பெருமான் பிறந்

தருளினார், இவர் தாய்தந்தையர் பெயர் புலப்பட ல்லை. இவர் தந்தையார் பெயர் சம்புபாதாசிரியர் எனவும், அன்னையார் பெயர் சிவஞானவதியார் எனவும் இஞ்ஞான் றுள்ளார் சிலர் கூறினும் இப்பெயர்கள் நம்பியார் திருவிளை யாடலினும், திருவாதவூரர் புராணத்தினுங் காணப்படாமை யானும், இத்தகைய வடமொழிப் பெயர்கள் பழைய நாளிலிருந்த தமிழர்க்குள் வழங்காமையானும் திருஞான சம்பந்தப் பெருமான் தந்தையார் பெயராகக் கூறப்படுஞ் சிவபாதவிருதயர் என்பதன் மொழிபெயர்ப்பாகச் சம்புபாதாசிரியர் என்னுஞ்சொற் காணப்படுதலோடு அவர் தம் ன்னையாரின் பெயரான பகவதி என்பதைப்போற் சிவஞானவதி என்னும் மொழியுங் காணப்படலானும் இப்பெயர்கள் பிற்காலத்தார் எவரோ புனைந்து கட்டி விட்ட னவாதல் தேற்றமாம். இனி, இவர் பிள்ளைப் பருவத்தினராய் இருந்தஞான்று இவர்க்கு வழங்கிய பெயரும் இன்னதென்று புலனாகவில்லை. 'திருவாதவூரர்' என்பதும் அவர் திருவாதவூரிற் பிறந்தமைபற்றிப் பிற்றைஞான்று வழங்கிய தொன்றேயல்லது, அஃது அவர்தம் இயற்பெயரன்று, 'மாணிக்கவாசகர்' என்பதும் அவர் அருளிச்செய்த நூல்களின் சொல் விழுப்பம்நோக்கிப் பின்வந்த பெயராக விளங்குதலின், அதுவும் அவரது இயற்பெயரன்று. அது நிற்க.

திருவாதவூரடிகள்

னி

பிள்ளைப்பருவத்தே இயற்கை நுண்ணறிவு மிக்கவரா யிருந்தமையாற், பதினாறியாண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/78&oldid=1587524" இலிருந்து மீள்விக்கப்பட்டது