உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

  • மறைமலையம் 22

நிரம்புதற்குள் தமிழ் ஆரியம் முதலான மொழிகளில் உள்ள கருவி நூல்களும் அறிவு நூல்களுமெல்லாம் முற்றக்கற்று மறுவற்ற முழுமதிபோற் செய்கையறிவும் நிறைந்து திகழுவா ராயினர். அக்காலத்து மதுரையிற் செங்கோலோச்சிய பாண்டிய மன்னன் அடிகளின் நுண்ணறிவையுங் கல்விப் புலமையையும் ஏனை நல்லியல்புகளையும் ஆன்றோர் பலர் வியந்துரைக்கக் கேட்டு அவரைத் தன்மாட்டு வருவித்துப் பார்த்து, அவ்வான்றோர் உரைத்ததற்கு மேலாய் அவரியல்பு கள் இருத்தல் உணர்ந்து அவர்பாற் பேரன்புபூண்டு, அவர்க்குச் சிறந்ததொரு பட்டப் பெயருஞ் சூட்டி, அவரைத் தனக்கோர் அமைச்சராகவும் அமர்த்திக் கொண்டான். இங்ஙனந் தன்மாட்டு அவர்க்கு அமைச்சுரிமை நல்கிய பாண்டியமன்னன் பெயர் பழைதாகிய நம்பியார் திருவிளையாடலிலாதல் திருவாதவூரர் புராணத்திலாதல் எடுத்துக் கூறப்படாமையின், பிற்காலத்தினரான பரஞ்சோதி முனிவர் அவர் பெயர் அதிமர்த்தனன் எனச் சொல்லியதற்குத் தக்க சான்று இது தான் என்று துணிதல் ஏலாது பழையநாட் பாண்டியமன்னர் பெயர்களெல்லாம் பெரும்பாலுந் தூய தமிழ்ச்சொற் களாயிருக்க, ‘அரிமர்த்தனன்' என்னும் து வடமொழியா யிருத்தலும் ஐயுறற்பாலதொன்றாம்.

ற்

இனி, அடிகள் அமைச்சராயிருந்தபொழுது எல்லாச் செல்வ வளங்களும் உடையராய், எல்லா இன்பங்களும் நுகர்ந்திருந்தாரென்பது

மேற்குறித்த ரு

புராணங் களாலும் விளங்குதலோடு, திருவாசகந் திருக்கோவை யாரில் அவர் ஆங்காங்கு அருளிச்செய்திருக்குங் குறிப்பு களானும் நன்கு புலப்படும். இவர் பிறவியிலேயே உளந் தூயராய்ச் சிவபிரான் திருவடிக்கண் மெய்யன்புபூண்டு ஒழுகினமையின், உலகவின்பங்களை ஆராந்துய்த்து, அவற்றின்கண் உவர்ப்பு வரப்பெற்றாராய்த் தம்மைத் திருவருணெறிக்கட்படுவித்துத் தம் பிறவிவேர் அறுப்பா னாகிய மெய்க்குரவனைத் தேடியடையும் வேட்கை மீதூரப்பெற்றார். ஞானாசிரியனைப் பெறுதற்கு மேன் மேலெழும் வேட்கை ஒருபால் ஈர்க்க, அரசன் தம்மேல் வைத்த அமைச்சியற்றொழிற் கடன் மற்றொருபால் ஈர்க்க இங்ஙனம் இவ்விரண்டன் இடையே சிவபிரான் றிருவருள் உதவியை எதிர்நோக்கியபடியாய் அடிகள் ஒழுகிவரலானார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/79&oldid=1587525" இலிருந்து மீள்விக்கப்பட்டது