உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

மறைமலையம் 22

சிவிகையிலேறிக் கூடப்போதுவார் குழாம் சூழ்ந்துவர, மதுரை விட்டு அகன்றார்.

L

அகன்று பரிவாரங்களோடும் பெருவழி கடந்து திருக் கானப்பேர் என்னுஞ் சிவபிரான் திருக்கோயில் கொண் ருளிய ஊருக்கு வந்துசேர்ந்தார். அங்கே பரிவாரங் களுந்தாமுமாக இறங்கி நாட்கடன்கள் கழிப்பிச் சிவபிரானை வழிபட்டு, அயர்வு தீர்ந்தபின், அவ்வூரைவிட்டுப் புறப்பட்டு வழிச்செல்வாராயினார். இவ்வாறு நெடுவழி போய், முடிவாகத் திருப்பெருந்துறை என்னும் ஊருக்கு அணித்தாக வந்தனர்.

அவ்வூர்க்கு மிக அருகில் வந்துசேர்தலும், நெஞ்ச மும் உரையும் வேறு தன்மையை அடைய, அன்பு கரை கடந்து எழக் கண்களில் நீர் ஒழுக, அனல்சேர் மெழுகென உள்ளங்கரையப்பெற்றார். இதற்குமுற் செல்வத்தின் மேலிருந்த அவாவானது அற்றுப்போகத் தமது நெஞ்சம் ஒருவழி யொடுங்குதலைக் கண்டு மிகவும் வியப்புற்று, 'இவ்விடத்தின் கண் ஏதோ ஒரு புதுமை இருத்தல் வேண்டும்' என்று உணர்ந்தாராய், அவ்வூரின்கண் ஒரு பூஞ்சோலையின் பக்கமாய் அடிகள் தம் பரிவாரங்களோடுஞ் செல்வுழி, அச் சோலை யினின்றும் அறிவு நூல் ஓதுவார்தம் ஒலியானது வரக்கேட்டுத், தம் ஏவலர் சிலரை யழைத்து ‘அஃதென்னை என்று பார்த்து வம்மின்!” என ஏவினார். அவ்வேவல்வழிச் சென்றார் மீண்டு வந்து ‘ஒரு குருந்தமர நீழலிலே அடியார் பலர் புடைசூழச் சிவபிரானை யொத்தவரான ஒரு பெரியார் எழுந் தருளியிருக்கின்றார்' என்று கூறினார்கள். அதுகேட்ட தும், அவரைக் காணும் வேட்கை பெரிதுடையராய் அக் காவினருகே சென்று, சிவிகைவிட்டு இழிந்து, அதனுட் புகுந்து, அம்மெய்க்குரவனைக் வளவானே தஞ்செயலற்று, உடல் நடுங்கி நிலத்தின்மீது விழுந்து பன்முறை பணிந்துநின்றார். அவ்வாசிரியனுந் தனது திருநோக்கத்தான் அடிகளை முடிமுதல் அடிகாறும் நோக்கி, அவரைப் புனிதராக்கித், தனதருகே அழைத்துப் பலகாலும் முறுவலித்து, அவர்தம் முடிமிசைத் தன்திருவடிகளைச் சூட்டித் திருவைந் தெழுத்தின் உண்மையை அவரது செவிப்புலத்து அறிவுறுத் தருளினான்.

கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/81&oldid=1587527" இலிருந்து மீள்விக்கப்பட்டது