உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

2. அருள்பெற்றவரையுள்ள ஆய்வு

இதுவரையிற்போந்த வரலாற்றின்கண் ஆராய்ந் தறியற்பாலன சில உள. நம்பியார் திருவிளையாடலிலும், கடவுள் மாமுனிவர் திருவாதவூரர் புராணத்திலுங் காணப் படும் இவ்வரலாற்றுப் பகுதியிற் சிற்சில மாறுபாடுகள் உள்ளன. அடிகள் திருப்பெருந்துறைக்கு அருகில் வருதலும்

தஞ்நெஞ்சம் ஓடுங்கி அன்பின் வழிப்படுதல் கண்டு.

அவ்விடத்தின்கண், தாமெடுத்து வந்த பொருட்டிரளோடும் வைகுதற்குக் கருதித், தம்முடன் வந்த பரிவாரங்களை யெல்லாம் நோக்கி ‘ஆவணித்திங்களிற்றான் குதிரைகள் வந்திறங்கும்; அப்போது அவற்றை யான் விலை கொண்டு வருவேன்; நீங்கள் இப்போதே பாண்டியமன்னன்பாற் சென்று இச்செய்தியை அறிவிமின்கள்!' என்று சொல்லி விடுத்தருளினாரென்று நம்பியார் திருவிளையாடல் கூறாநிற்கும். மற்றுத் திருவாதவூரர் புராணமோ, அடிகள் அங்கெழுந்தருளிய மெய்க்குரவனால் ஆட் ட்கொள்ளப்பெற்றுத், தாம் மேற்கொண்டு மன்னனது வினையை மறந்திருக்க, அவருடன் போந்த பரிவாரங்கள் அவரை யழைத்தும், அவர்களை இன்னா ரென்றறியாமல் அப்புறம் அகல்கவென்றுரைக்க, அவர்கள் தாமாகவே பாண்டியன்பாற் சென்றனரென்று கூறும்.

வந்த

இவ்வாறு முரணும் இவ்விருவேறு வரலாறுகளையும் ஆராய்ந்து பார்க்குங்கால் திருவாதவூரர் புராணவுரையே இவ் விடத்திற்குப் பொருத்தமாகக் காணப்படுகின்றது. என்னை? திருப்பெருந்துறையை அணுகியவுடன் தமக்கு நேர்ந்த உள்ள உருக்கத்தைக் கண்டு, சடுதியில் தம் பரிவாரங்களைப் பாண்டியன்பால் திருப்பிவிட்டனரென்னும் நம்பியார் கூற்று ஆராய்ந்து செய்யாக் குற்றத்தை அடிகள்பால் ஏற்றுவதாய் முடிதலானும், எதனையுந் தீரத்தெளிந்து செய்யும் அமைச்சியற்றிறத்தில் தலைநின்றார் அடிகளென்பது

இரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/82&oldid=1587528" இலிருந்து மீள்விக்கப்பட்டது