உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

மறைமலையம் 22

புராணங்களுக்கும் உடன்பாடாகலின் அவரது அத்தன்மைக்கு இழுக்காமல் அவர்தம் ஆசிரியனால் அடிமைகொள்ளப் பட்டபின் தாம் மேற்கொண்டுவந்த வினையை மறந்திருக்க அப் பரிவாரங்கள் தாமாகவே அவரை அகன்று பாண்டியன் பாற் சென்றனவென்று மற்றுத் திருவாதவூரர் புராணங் கூறுதலானும் என்பது. தஞ்செயலற்றுச் சிவன்செயலாய் நின்று உலகியல் நிகழ்ச்சிகளை மறந்திருப்பாரைக் குற்றங் கூறுவார் யாண்டும் இலர். பேய்பிடி யுண்டாரையும் வெறிபிடித்தாரையுந் தங் கடமைகளின் வழிஇயனார் எனக் குறை கூறுதல் எவர்க்கும் உடன்பாடன்று.

இனி, அடிகள் தம் பரிவாரங்களையெல்லாம் போக்கிய பின் தாம் திருப்பெருந்துறையிலுள்ள திருக்கோயிலுட்புக, அங்கு ஒருபக்கத்தே அடியார் புடைசூழ மெய்க்குரவன் எழுந்தளியிருத்தலைக் கண்டார் என நம்பியார் திருவிளை யாடல் கூறத் திருவாதவூரர் புராணம் அடிகள் திருப்பெருந் துறையில் ஒரு பூஞ்சோலைப் பக்கமாய்ப் போதுகையில் அதனினின்று அடியார் ஓதும் அறிவு நூல்ஒலி வருதல்கேட்டு, ஒற்றரைவிடுத்து, அவர் வந்துரைத்ததன் மேல், அச்சோலை யுட்புக்கு ஆசிரியனையும் அவனைப் புடைசூழ்ந்த அடியார் குழாத்தினையுங் கண்டாரெனப் புகலும் இவ் வரலாற்றுப் வ் பகுதியிலும் நம்பியார் திருவிளையாடல் பிழைபடுகின்றது. திருப்பெருந்துறையில் அடிகள் சென்ற காலத்து ஆண்டுச் சிவபிரான் திருக்கோயில் இருந்த தில்லையென்பதற்கு அதன்கண் இஞ்ஞான்றும் சிவலிங்க வடிவம் இல்லாமையும் ஆ ண்டுச் செய்யப்படும் நாள் வழிபாடு மாணிக்கவாசகப் பருமாற்கும் அவரை ஆண்டருளிய ஆசிரியன் வைத்துச் சென்ற திருவடிச்சுவட்டிற்குமே ஆற்றப்படுதலும், திருவிழா வென்னுஞ் சிறப்பு வழிபாடு மாணிக்கவாசகப் பெருமாற்கே செய்யப்படுதலும் சான்றாமென்க.

தம்மைத் திருப்பெருந்துறையில் இறைவன் ஆசிரிய வடிவிற்றோன்றி அடிமைகொண் டருளியவாற்றினையே அடிகள் திருவாசகத்தின்கண் அருளிச்செய்கின்றனரன்றி, ஆண்டுத் திருக்கோயில் உண்டெனக் கொண்டு அதன்கட் சிவபிரானை வழுத்துந் திருப்பதிகங்கள் அருளிச் செய்யாமை யும், “திருப்பெருந்துறையில் நிறைமலர்க்குருத்தம் மேவியசீர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/83&oldid=1587529" இலிருந்து மீள்விக்கப்பட்டது