உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் -1

51

தியே” என்றருளிச்செய்தாரல்லது திருக்கோயிலுட் குருந்தம் மேவியசீர் ஆதியே என்று அருளிச் செய்யாமையுங் கருதற் பாலவாம் மாணிக்கவாசகப் பெருமாற்கு அருட்பாடு நிகழ்ந்த பல நூற்றாண்டுகட்குப் பின்னரேதான் திருப்பெருந்துறையில் திருக்கோயில் அமைக்கப்பட்டதென்பது தேற்றமாம். அற்றன்று, அடிகட்கு முன்னும் ஆண்டுத் திருக்கோயில் உண்டெனின் அதன்கண் இன்றுகாறுஞ் சிவலிங்க வடிவம் இல்லாமையும், அடிகட்கு முற்காலத்த தாயின் ஆண்டுச் சிவலிங்க வடிவம் இருந்ததாதல் வேண்டுமாகலின், அது பின் இல்லையாதல் சையாமையும் தேர்ந்துணரவல்லார்க்கு அவ்வாறுரைத்தல் பொருந்தாது என்க. எனவே, அடிகள் திருப்பெருந்துறை சென்ற ஞான்று தம் மெய்க்குரவனைக் கண்டது ஒரு பூங்காவி லேயாமென்னுந் திருவாதவூரர் புராணவுரையே உண்மை வரலாறாமென்று கடைப்பிடிக்க.

இனி, அடிகள் தம் ஆசிரியனைக் காண்டலும் நெஞ்சம் உருகப்பெற்றாரேனும், அவரை மனத்தினால் வணங்கி மெய்யினால் வணங்காராய் அவரெதிரே சென்று அவர் தந்திருக்கையில் உளதாகிய ஓர் ஏட்டுச்சுவடியைக் கண்டு, அஃது யாது?' என்று வினவினாரென்றும் ‘அது சிவஞான போதம்' என்று ஆசிரியரின் விடையளிக்க அடிகள் மறித்தும் 'சிவமாவது யாது? ஞானமாவது என்னை? போதம் என்பது எதனைக் குறிப்பது?' என்று கேட்க ஆசிரியன் 'சிவமென்பது ஒன்றேயாம்,ஞானமாவது அச்சிவத்தினியல்பை உள்ளவாறறிவது, போதமோ வென்றால் அங்ஙனம் உணர்ந்ததனைத் தன்வயிற் றெளியக் காண்டலாம்; என்று விளக்கி விடை மொழிந் தருளினரென்றும், அவ்விளக்கவுரையைக் கேட்டு அடிகள் ஆசிரியன் திருவடிகளில் வீழ்ந்திறைஞ்சித் தம்மை யடிமை கொள்கவென வேண்டினாரென்றும், அதற்கிணங்கி ஆசிரியன் அப் பூங்காவில் தம்மடியார் பலரையும் ஏவிப், பட்டினாலும் பூமாலைகளாலும் ஓர் அழகிய கோயில் சமைப்பித்து அதன்கண் மாணிக்கவாசகரோடு தனியிருந்து சிவஞானபோதப் பொருள் முழுவதூஉம் விரித்துரைத்து அவரை அடிமை கொண்டருளினா ரென்றுங் கடவுண்மாமுனிவர் திருவாதவூரர் புராணத்தின்கட் கூறினார். ஆனால், இங்ஙனமொரு வரலாறு பெரும்பற்றப் புலியூர்நம்பி திருவிளையாடலிற் காணப்படுகின்றிலது.

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/84&oldid=1587530" இலிருந்து மீள்விக்கப்பட்டது