உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

மறைமலையம் 22

பெரும்பற்றப்புலியூர்நம்பி,

கட

6

வுண்மாமுனிவர்

அதன்

காலத்திற்கு மிக முற்பட்டிருந்தவரென்பது நன்கு புலனா கின்றது குருந்தமர நீழலில் எழுந்தருளிய குரவன் அடிகளுக்கு மெய்ப்பொருள் அறிவுறுத்துவதாகக் கடவுண்மாமுனிவர் தாங் கூறிச்செல்லும் பகுதியிற் சிவஞானசித்தியில் உள்ளவாறே உயிரினியல், மலத்தினியல், இருவினையியல், இறைவன்றன் அருவுருவினியல், சரியை, கிரியை, யோக ஞானங்களினியல், வீடுபேற்றினியல் முதலாயினவெல்லாந் தெளிந்தெடுத்துக் கூறுதலின், அவர் சிவஞானசித்தி யாக்கியோரான அருணந்தி சிவனார்க்கும் பிற்பட்டவராதல் ஒருதலை, இனி, அருணந்திசிவனாாக்கும் அவர்தம் ஆசிரியர் மெய்கண்டதேவ நாயனார்க்கும் முற்பட்ட காலத்தே, திருவிளையாடலியற்றிய பெரும்பற்றப்புலியூர் நம்பி இருந்தாரென்பது பதிப்பாசிரியர் அவரது காலம் ஆராய்ந்துரைத்த பகுதியால் நன்கு விளங்கா நிற்கின்றது. சிவஞான போதநூல் அருளிச் செய்த மெய்கண்டதேவ நாயனார் காலத்திற்குப் பின் வந்தவரான கடவுண்மாமுனிவர் அச்சிவஞான போதம் குருந்தமர நீழலில் எழுந்தருளிய ஆசிரியன் திருக்கையில் இருந்ததெனக் கூறுதலும், மெய்கண்ட தேவர் காலத்திற்கு முற்பட்ட பெரும்பற்றப் புலியூர்நம்பி சிவஞானபோத நூலையாதல் அந்நூலிற்போந்த பொருளையாதல் அம் மெய்க்குரவன் அடிகட்கு அறிவுறுத்தருளினானென்று சிறிதாயினுங் கூறாமையும் என்னென்று புடைபடவைத்து ஆராய்ந்து உணர்வார்க்குக் கடவுண்மா முனிவர் ஈண்டுக் கூறிய இவ்வரலாறு உண்மையன் றென்பதூஉம், அஃது அவரே கட்டிச் சொன்னதா மென்பதூஉம் நன்கு விளங்காநிற்கும் தமது காலத்திற் சிவஞான போதநூல் இருந்ததாயின், அதனையே குருந்தமர நீழலில் எழுந்தருளிய குரவன் மாணிக்கவாசகப் பெருமானுக்கு அறிவுறுத்தருளியது உண்மையாயின் அவ் விரண்டனையும் பெரும்பற்றப் புலியூர்நம்பி தமது திருவிளை யாடலில் நன்கு எடுத்து மொழிந்திருப்பார். அவர் காலத்தில் அந்நூலும், அந்நூலை அறிவுறுத்தருளி னாரென்னும் வரலாறும் வழங்காமையின் அவர் அவற்றைக் கூறிற்றிலர்.

மற்றுக், கடவுண்மாமுனிவர் மெய்கண்டதேவ நாயனார் காலத்திற்குப் பிற்பட்டிருந்தமையின், அக் குரவன் அடிகட்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/85&oldid=1587531" இலிருந்து மீள்விக்கப்பட்டது