உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 1

53

அறிவுறுத்தது சிவஞானபோத நூலாயிருக்கலாமென்று தாமாகவே கருதி அங்ஙனம் உண்மையல்லாத தொன்றைப் புனைந்துகட்டிச் சொல்லினார்; அதுவேயுமன்றிச், சிவஞான போதநூல் அளவை நூன்முறையோடு படுத்து முப்பொரு ளுண்மையினைப் பரக்க ஆராய்ந்து அதனைத் தேற்றுங் கடப்பாடே பெரும்பான்மையும் உடைத்தாய், உயிர் மாசுதீர்ந்து தூய்தாகி இறைவன் திருவருளோடு இரண்டறக் கலந்து நிற்கு மாற்றினைச் சிறுபான்மை கூறுவதன்றி அதனைத் தான் எடுத்துக்காட்டுவதன்று, அவ்வருளோடு தலைக்கூடி நிற்கும் நிலை அருட்குரவன் நேரே எழுந்தருளி அடையாளங் களான் அறிவுறுக்கும் முகத்தானன்றி வாயாது, அவ்வருணிலை முடிபே ஐந்தெழுத்தின் குறிகளால் ஆசிரியன் அறிவுறுத்தத் தெளியப்படும் முடிபொருணிலையாம். நன்மாணாக்கனது மிக முறுகிய அன்பின் பதத்தினை யறிந்து அருட்குரவன் நேரே யெழுந்தருளிக் காட்டுவது ஐந்தெழுத்தருணிலையே யாகுமல்லாமல், இதன்கீழ் அறிவுநிலையாய் நிற்கும் பரந்த முப்பொருளாராய்ச்சி யாகாது. அம் முப்பொருளாராய்ச்சி அறிவுநூலாசிரியனுதவிகொண்டு L பலகாலும் பலநாளும் ஆராய்ந்து தெளிந்து மெய்யறிவு விளங்கி, இறைபணி பேணி, அன்புமிக முறுகி முதிர்ந்து, அறிவு நிலைக்கு மேற்கண்ணதான அன்புநிலையிற் சென்றுவைகிய மாணாக்கற்கு அருட்குரவன் தானே எழுந்தருளி வந்து; ஐந்தெழுத்தருணிலை காட்டி, ஒரு நொடிப்பொழுதில் அவரைத் தனக்குரிமையாக்கி ஆண்டுகொள்வன். ஆதலால், இங்ஙனம் நடைபெறுவதாகிய அருளுரை மரபுக்குப் பொருந்த நம்பியார் திருவிளையாடல் ‘அடிகள் அருட்குரவனைக் கண்ட ஞான்றே அவனால் ஐந்தெழுத்துண்மை அறிவுறுக்கப்பட்டு அருளொடு தலைக்கூடினார்' என்னும் வரலாற்றுரையே உண்மைநெறி திறம்பாததாமென்க.

முற்றும்

மற்று, அடிகள் தாம் இளைஞராயிருந்த காலத்தும் அமைச்சராயிருந்த காலத்தும், வடமொழி தென்மொழிகளி

லுள்ள கருவிநூல்

அறிவு

நூற்பொருள்களெல்லாம்

ஒருங்காராய்ந்து அவற்றிற்கோர் எல்லையாய் நின்றாரென்பது இவரது வரலாற்றினைக் கூறும் எல்லாம் புராணங்கட்கும் ஒப்பமுடிந்தமையின், அவர் குருந்தமர நீழலில் லில் அருட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/86&oldid=1587532" இலிருந்து மீள்விக்கப்பட்டது