உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

  • மறைமலையம் - 22

குரவனைத் தலைப்பட்டு அவனால் ஆட்கொள்ளப்பட்ட வழியும் அவ்வறிவுநூற் பொருளாராய்ச்சியே அறிவுறுத்தப் பட்டாரெனக் கொண்டு அம் முப்பொருளாராய்ச்சியினை விரித்துக் கூறும் கடவுண்மா முனிவரது திருவாதவூரர் புராண வுரை ஈண்டும் பிழைபடுகின்றதென ஆராய்ந்துணர்ந்து கொள்க இவ்வாற்றால், திருவாதவூரடிகட்கு அருட்குரவன் அறிவுறுத்தது ஐந்தெழுத் தருணிலையேயா மென்பதூஉம், அதனால் அந்நூல் அறிவுறுக்கப்பட்டதென்னும் வரலாறு பொருந்தாமையோடு அந்நூற்பொருள் அறிவு நூலாராய்ச்சிக்கட் படுவதாகலின், அவையெல்லாம் முன்னரே முற்றுமுணர்ந்துபோந்த அடிகட்கு மறித்தும் அவற்றையே மெய்க்குரவன் செவியறிவுறுத் தருளினா னென்றல் அருளுரை மரபொடும் மாறாமென்பதூஉம் இனிது பெறப்படும். அடிகளும் செத்திலாப்பத்தில் “என்னையோர் வார்த்தையுட் படுத்துப் பற்றினாய்" எனத் தெரித்துரைத்தலும், சிவ புராண முதலில் “நமச்சிவாய” எனத் தொடங்கிக் கூறு தலும் அவர்தம் ஆசிரியன்பாற் பெற்றது ஐந்தெழுத் துண்மையேயாதலைத்தெற்றெனப் புலப்படுக்குமென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/87&oldid=1587533" இலிருந்து மீள்விக்கப்பட்டது