உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

3. ஆட்கொள்ளப்பட்டபின் நிகழ்வு

ட்

னி, அடிகள் இவ்வாறு அருட்குரவனால் கொள்ளப்பெற்று அன்புருவாகி ஆசிரியனை வழுத்திய படியாய் அவனை அகலாதிருந்துழிக், குரவனாய் எழுந் தருளிய பெருமான் தன்னைப் பாடுகவென்று கட்ட கட்டளை யிட்டருளச் ‘சென்னிப்பத்தும்’, ‘அச்சோப்பத்தும்' அங்ஙனமே அருளிச்செய்தார் என்று நம்பியார் திருவிளையாடல் கூறா நிற்கும். இறைவனே அருட்குரவனாய் எழுந்தருளித் தம்மை ஆண்டுகொண்ட அருட்டிறத்தைச் சென்னிப்பத்தில், “பத்தர் சூழப் பராபரன் பாரில் வந்து பார்ப் பானெனச் சித்தர் சூழச் சிவபிரான் தில்லை மூதூர் நடஞ்செய்வான் எத்த னாகிவந் தில்பு குந்தெமை ஆளுங் கொண்டெம் பணிகொள்வான் வைத்த மாமலர்ச் சேவ டிக்கணஞ் சென்னி மன்னி மலருமே"

என்று அடிகள் தாமே அருளிச்செய்தல் காண்க.

இறைவன் அங்ஙனம் அருட்குரவனாய் எழுந்தருளித் தம்மை ஆட்கொண்டதுந் திருப்பெருந்துறையிற் குருந்தமரம் ஒன்றன் நீழலிலேயாம் என்பதனை அடிகளே திருவாசக அருட்பத்தில்,

“திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந்துறையிற்

செழுமலர்க் குருந்தம் மேவியசீர் இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட்

டென்னுடை எம்பிரான் என்றென்

றருந்தவா நினைந்தே ஆதரித்தழைத்தால்"

என்றருளிச் செய்தவாற்றானும் நன்கு பெறப்படும்.

வ்வாறு அடிகள் இறைவனைத் தலைப்பட்டு அவன் றிருவருட்பேற்றிற் குரியரானபின், அவருள்ளம் முழுதும் அருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/88&oldid=1587534" இலிருந்து மீள்விக்கப்பட்டது