உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

  • மறைமலையம் - 23

நூல்கள்தாம் சிவபெருமான் அருளிச் செய்தனவாம்! இங்ஙனங் கூறும் ஆராய்ச்சி யுணர்வில்லாத் தமிழ்ப்புலவர் சிலரின் புல்லியவுரை நகையாடி விடுக்கற்பாலதாமன்றி மற்றென்னை! கட்குடியும், சூதாட்டமும் மிக்க ஆரியர் தமிழ்நாடு புகப்புகத் தமிழரில் மேல்வகுப்பினரும் அவ்விரண்டையுங் கைக் காள்ளத் துவங்கினமை கண்டு நடுக்குற்றே தமிழ்ச்

சான்றோர்கள்,

"உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார்”

எனவும்,

“ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி”

எனவும்,

“பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து அல்லல்உழப்பிக்குஞ் சூது

எனவும் அறிவுறுத்தி அவரைக் காப்பாராயினர்; இச் செய்யுட் களின் பொருள் கள்ளை உண்ணல் ஆகாது. அறிவின் மிக்கோ ரால் அஃது உண்பவர் இகழ்ந்து ஒதுக்கப்படுவர் என்பதும், தன் மகன் கள்ளுண்பனாயின் எங்கே கள்ளுண்ட வெறியால் அவன் தன்னைப் பெண்டாள வருவனோவென்று அவன் தாயும் அவனைக் கண்டு நடுங்குவளாயின் சான்றோர் அவனைக் கண்டு அருவருத்தல் சொல்லல் வேண்டுமோ என்பதும், சூதாட்ட மானது தன்னைக் கைப்பற்றினவனுக்கு உள்ள செல்வமெல்லாங் கெடுத்து அவனைப் பொய்பேசச் சொல்லி மற்ற உயிர்களிடத்து அவனுக்கு இரக்கம் இல்லாமற் செய்து அவனைத் துன்பத்தில் அலைக்கும் என்பதுமேயாம். ஆசிரியர் திருமூலரும்,

"மயங்குந் தியங்குங்கள் வாய்மை அழிக்கும் இயங்கு மடவார்தம் இன்பமே எய்தி முயங்கும்”

(திருமந்திரம், 317)

6

என அருளிச்செய்தமை காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/105&oldid=1588413" இலிருந்து மீள்விக்கப்பட்டது