உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் மேற்செய்யுட்களிற்

97

கள்ளுண்ட வர் காமம் மிக்கு வரைதுயிைன்றி ஒழுகுவர் என்று ஆன்றோர் மொழிந்ததற்கு ணங்கவே, ஆரியமாந்தரும் அவராற் றெய்வமாகக் கொள்ளப் பட்டோரும் செய்த காமப் புன்செயல்கள் அவரெழுதிவைத்த நூல்களிலேயே காணப்படுகின்றன. பிரஜாபதி காமங் காழ்ப் பேறித் தன் புதல்வியைப் புணர்ந்து, பின்னர்த் தான்செய்த அத் தீவினையை நினைந்து மிக வருந்தினமை ‘சதபத பிராமணம்' (1, 7, 4), 'ஐதரேய பிராமணம்’ (3, 33), ‘மத்ஸ்ய புராணம்' (3, 32, 49) முதலிய நூல்களில் வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருக் கின்றது. இந்திரன் அங்ஙனமே வெறி கொண்டு கௌதம முனிவரின் மனைவியான அகலிகையைப் புணர்ந்தமை இராமாயண உத்தரகாண்டத்தில் (30, 19-31) குறிக்கப்பட்டிருக் கின்றது. விவஸ்வான் புதல்வரான யமனும் யமியும் தமையனுந் தங்கையுமா யிருந்தும், யமி தன் தமையனைப் புணர முயன்றமை இருக்குவேதத்திலேயே (10,10) நன்கெடுத்துச் சொல்லப்பட்டது. தமிழ்ப் பெருந்தெய்வமாகிய சிவபிரான் காமனை எரித்தோன் என்பது எச் சமயத்தவரும் உணர்ந்ததோர் உண்மையாகலின், அவனை வழிபடுந் தமிழருங் காமத்தாற் பற்றப்பட்டவர் அல்லர் என்பது தானே விளங்கும். அற்றேற், காமவுணர்ச்சியின்றி ஆணும் பெண்ணுமாய் மருவி வாழும் உலகவாழ்க்கை நடவாமையின், தமிழர் அஃது உடையர் அல்லர் என்றல் யாங்ஙனம் பொருந்துமெனின்; அற்றன்று. காமம் என்பது உயர்ந்த அறிவையும் மறைத்து இழிந்தவற்றின்மேல் விழைவு செல்லுமாறு ஒருவனை ஏவி, அது தீர்ந்த அளவானே அவனால் அருவருக்கப்படுவது; தமிழரில் உயர்ந்தோர் இத்தகைய காமப்பிணியாற் பற்றப்பட்டவர் அல்லர்; மற்று, எல்லா வாற்றானும் உயர்ந்த ஓர் ஆண்மகனும், எல்லாவற்றானும் உயர்ந்த ஒரு பெண் மகளும் தம்முள் ஒருவரையொருவர் இன்றியமையாராய், ஓராவிற்கு இருகோடு தோற்றினாற்போல உடம்பால் இருவராய்க் காணப்படினும் அன்பு ஊடுருவிய உயிரால் ஒருவரேயாய்ப் பேரன்பின் வழியாய்ப் பேரறிவு பூண்டு வழுவாதொழுகுங் காதற் கற்பொழுக்கத்தில் நிலைபெற் றோராவர்; இக் காதலன்பின் இயல்பு 'தொல்காப்பியப் பொருளதிகாரத்’தினும், ‘இறையனாரகப்பொருளுரை’யினும்,

'திருக்குறள் இன்பத்துப்பாலி'னும் திருச்சிற்றம்பலக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/106&oldid=1588418" இலிருந்து மீள்விக்கப்பட்டது