உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

66

மறைமலையம் - 23

'அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று”

எனவும் வற்புறுத்து அருளியதூமென்க. மற்று ஆரியரோ, கணவனும் மனைவியுமாய்ப் புணர்க்கப்டும் இருவர் தம்முள் அன்புடையரோ இலரோ என ஆராய்ந்து பாராது, பொருள் குறித்தும் புதல்வர்ப்பேறு குறித்தும் காமங் காழ்ப்பேறக் கண்டும் அவர் தம்மை ஏலாவகையாய்ப் பிணைத்துவிடுவர்; அப் பினணப்பின் கட்பட்ட அவர் ஒழுக்கம் பிழைத்துக் கற்பின் வழீ இயினும் அதனை அவர் ஒரு பொருட்டாக எண்ணார். இப்பெற்றியரான ஆரியர் தமிழ்நாடு புகுந்து தமது பொருந்தாப் 'புல்லியவாழ்க்கையை நிலைநாட்டவே, இச் செழுந்தமிழ் நாட்டின் கண்ணும் பொய்யும் வழுவும் பொங்கித் தோன்றின; தமிழர்க்குட் பண்டுதொட்டுவந்த காதல் ஐந்திணை யொழுக்கம் விடுபட்டுத், தம்முள் ஒருவரையொருவர் அறியாமலும் காதலியாமலும் இருந்தே பெற்றாரானும் உற்றாரானும் ஏலாவகையாய்ப் பிணைக்கப்படும் ஏலா மணவினை பிற்றைஞான்றைத் தமிழர்க்குட் பரவி நிலைபெறலாயிற்று; இவ்வேலாமுறை நிலைபெறத் துவங்கிய காலந்தொட்டு ஈண்டைத் தமிழ்மாதர்க்குங் கற்பொழுக்கம் நிலைபெறல் அரிதாயிற்று. ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்திலேயே ஆரியர்ப்பார்ப்பனர் தமிழ்நாட்டின் கட்புகுந்து நிலைபெற்றுத் தம்முடைய வழக்க வொழுக்கங்களைப் பரப்பியதனாற் பொய்யும் வழுவுந் தோன்றித் தமிழர் தம் ஒழுக்க முறைகளைச் சிதைப்பவாயின; இஃது அவர் கூறிய,

“பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப

9910

என்னுஞ் சூத்திரத்தால் நன்குணரப்படும். என்றிதுகாறுங் கூறிய இப்பகுதியாற், கிறித்து பிறப்பதற்கு ஒரு நூற்றாண்டு முன்னே தொட்டுத் தோன்றிய தமிழ் ஒழுக்க நூல்களெல்லாம், இந் நாட்டின்கட் புகுந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்பாற் காணப்பட்ட நாத்திகக் கொள்கையினையும், வேள்விக்கொலை, ஊன்உணவு, பிறன்மனை நயத்தல், சாதிச்செருக்கு, இரத்தற்றொழில், அருளிரக்கமின்மை, பொய்புனைதல், பேரவா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/111&oldid=1588442" இலிருந்து மீள்விக்கப்பட்டது