உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 2

113

'புறப்பொருள் வெண்பாமாலைப்' பாயிரவுரை அதனால் உண்மையன்றென மறுக்க.

எனவே, ஆசிரியர் தொல்காப்பியனார் அகத்தியர் மாணாக்கரென்றலும் வெறுங் கட்டேயாம். தொல்காப்பி மாணாக்கராய் அவர்செய்த உண்மையாயின், தொல்காப்பியப் பாயிரச் செய்யுளாகிய "வடவேங்கடந் தென்குமரியாயிடை" என்பது அவ் வுண்மையினை எடுத்துக் கூறு மன்றோ? மற்றஃது அங்ஙனம் உரையாமல் "முந்து நூல் கண்டு” என வாளா மொழிதலின், அகத்தியம் தொல்காப் பியனார்க்கு முன் இருந்தது அன்றென்பது பெற்றாம். தமக்கு முன்னிருந்த தமிழ்நூல்கள் பலவற்றையும் நன்காராய்ந்த தொல்காப்பியனார் நூல் செய்தமைபற்றியே 'முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி' என அது கூறுவதாயிற்றென்க. மேலும், ஆசிரியர் தொல்காப்பியனாராதல் தாமியற்றிய இலக்கணப் பெருநூலுள் யாண்டேனும் அகத்தியனாரைக் குறிப்பிட்டனரோ வென்றால் அதுவுமின்று; அவர் தமக்கு முன்னிருந்த ஆசிரியரைச் சுட்டும் இடங்களிலெல்லாம் “என்மனார் புலவர்” என்று பொதுப் படவே ஓதினார் செந்தமிழ்ப் பண்டைப் பேராசிரியராய் வயங்கிய ஆசிரியர் தொல்காப்பியனாரை வடமொழி வல்லார் ஒருவர்க்கு மாணாக்கராக்கிவிட வேண்டுமென்று விழைந்த பிற்காலத்து ஆரியப் பார்ப்பனரே அவரை அகத்தியனார் மாணாக்க ரெனவும், யமதக்கினி மகனாரெனவும் ஒரு புரட்டுக்கதை கட்டி விட்டார். இவற்றுக் கெல்லாம் தினைத்தனைச் சான்றேனுங் கி.பி.நான்காம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பழந்தமிழ் நூல்களிற் காணப்படாமையால், மேற்காட்டிய கதைகள் வெறும் பார்ப்பனக் கட்டே யாதல் தேற்றமாம். அற்றேல், இளம்பூரணர், அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியார் முதலான உரைகாரரெல்லாம் இக் கதையினை யெடுத்தாளுதல் என்னையெனின்; அவரெல்லாம் ‘புறப்பொருள் வெண்பா மாலை’ தோன்றிய கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவராய், ஆரியப் பார்ப்பனர் கட்டிய கதைச்சிக்கலிற் சிக்குண்டோ ராகலின், அவரெடுத்தாளுதல் பற்றி அக் கதைகள் மெய்யென நம்பற்பாலன அல்லவென்க. அல்லவென்க. 'புறநானூறு,'

யனார் அகத்தியனார்க்கு

அகத்தியத்தின்' வழிநூல் செய்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/122&oldid=1588495" இலிருந்து மீள்விக்கப்பட்டது