உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

  • மறைமலையம் - 23

அற்றேல், அகத்தியனார் மாணாக்கர் பன்னிருவரெனவும், அப் பன்னிருவரும் ஒருங்குகூடிச்செய்த நூலே ‘பன்னிருபடல’ மாம் எனவும். அப் பன்னிருபடலத்தின் வழித்தாகவே 'புறப்பொருள் வெண்பா மாலை' இயற்றப்பட்டதெனவும் அவ்வெண்பாமாலைப் பாயிரமாகிய "மன்னிய சிறப்பின்” என்னுஞ் செய்யுள் நுவலுதல் என்னையெனின்; அது பொருந்தாமை காட்டுதும்; 'பன்னிரு படலம்' என்னும் புறத்திணை நூல் ஆசிரியர் தொல்காப்பியனாரை உள்ளிட்ட அகத்தியர் மாணாக்கர் பன்னிருவரால் இயற்றப்பட்ட துண்மையாயின், அதன்கட் கூறப்பட்ட புறத்திணை யிலக்கணம் தால்காப்பியத்' தின்கட் கூறப்பட்ட புறத்திணை யிலக்கணத்தொடு பெரிதும் ஒத்தல் வேண்டும்; மற்று அஃது அவ்வாறின்றி அதனொடு மாறுபடுதலானும், அப் பன்னிருபடலத்துள் தொல்காப்பியனாராற் செய்யப்பட்ட தாகச் சொல்லப்படும் 'வெட்சிப்படலப்' பொருள் தொல்காப்பிய வெட்சித்திணைப் பொருளுக்கு முரண்பட்டு நிற்றலானும் அவ் வெட்சிப்படலம் தொல்காப்பியனார் செய்ததன்றென்பதும், அதன்கணுள்ள ஏனைப் படலங்களும் ஏ அகத்தியர் மாணாக்கராற் செய்யப்பட்டன அல்லவென்பதும் நன்கு பெறப்படும். இதுபற்றியன்றே முதலுரைகாரரான இளம்பூரண அடிகள் “பன்னிருபடலத்துள் வெட்சிப்படலம் தொல்காப்பியர் கூறினாரென்றல் பொருந்தாது”0 எனவும், பன்னிருபடலத்துள் கரந்தைக்கண் புண்ணொடு வருதல் முதலான வேறுபடச் சில துறை கூறினாராகலின், புண்படுதல் மாற்றோர் செய்த மறத்துறையாகலின், அஃது இவர்க்கு மாறாகக் கூறலும் மயங்கக் கூறலுமாம். ஏனையவும் இவ்வாறு மயங்கக் கூறலுங் குன்றக்கூறலு மிகைபடக் கூறலும் ஆயவாறு எடுத்துக்காட்டின் பெருகுமாதலின், உய்த்துணர்ந்து கண்டுகொள்க எனவும், ஓதுவாராயினர். இவ்வாறுரைத்த இளம்பூரண அடிகளின் கருத்தோடு ஒட்டியே, அவர்க்குப்பின் தொல்காப்பியத்திற்கு உரைவகுத்த நச்சினார்க்கினியருங் கூறக் காண்டலின், 'பன்னிருபடலம்' அகத்தியர் மாணாக்கர்

9911

6

பன்னிருவருஞ் சேர்ந்து சய்ததாமென்றல் வெறுங்

கட்டுக்கதையே யாம் என்க. இக்கதையை மெய்யென நம்பி அதனை யெடுத்துக் கூறிய பிற்காலத்து நூலாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/121&oldid=1588490" இலிருந்து மீள்விக்கப்பட்டது