உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

111

பார்ப்பனர் கட்டிவைத்த பொய்க் கதைகளேயல்லாமல் மெய்யாவன அல்ல. தமக்கும், தம்மினத்தார்க்கும் தமக்கே உரியதென்று காண்ட வடமொழிக்கும், உயர்வு தேடும்பொருட்டுப் பார்ப்பனர் கட்டிய இக் கதைகளெல்லாம் அவர் இத் தென்றமிழ் நாட்டில் வந்து நிலைபெற்ற பிற்காலத்தே எழுந்தனவாகும். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்வந்த நூல்களிலும் உரைகளிலும் புராணங்களிலும் மட்டும் அகத்தியனார் தொல்காப்பிய னாரைப் பற்றி மேற்காட்டிய கதைகள் காணப்படுகின்றன.

'மணிமேகலை'யில் அகத்தியனாரைப் பற்றிய குறிப்புக் காணப்படினும் அவர் தமிழ்க்கு இலக்கணஞ்செய்தா ரென்றவாது, அவர் மாணாக்கர் தொல்காப்பியனா ரென்றாவது அதன்கண் ஏதுஞ் சொல்லப்பட்டிலது. ‘இறையனாரகப் பொருளுரைப் பாயிரத்’தில் அகத்தியனாராற் செய்யப்பட்டது அகத்தியம். அவர் இருந்தது தலைச்சங்கம் என்பது கூறப்பட்ட தாலோவெனின்; அவ்வுரைப் பாயிரத்திலுள்ள இன்னோரன்ன வெல்லாம் நக்கீரனார் உரைத்தனவல்ல வென்றும், அவை புராணக்கதைகள் மிக்கெழுந்த சேர்க்கப்பட்டனவா மென்றும் இவ் ஆராய்ச்சிவல்லா ரெல்லாம் உரைப்பக் காண்டலானும், அவ் வுரைப்பாயிரத்திற் கண்ட அவற்றுக்கெல்லாம் பழைய நூற்சான்றுகள் சிறிது மின்மை யானும் அவை உண்மையென்று கொள்ளற்பாலன அல்ல.

பிற்காலத்தே யிருந்தவரால்

எழுதிச்

T

அற்றேற், 'புறப்பொருள் வெண்பாமாலைப்'பாயிரத்தில் அகத்தியனார் தொல்காப்பியனாரைப் பற்றிய இக்குறிப்புகள் காணப்படுதல் என்னையெனின்; 'புறப்பொருள் வெண்பா மாலை' கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட நூல் அன்றாகலின், புராணகாலத்து வந்த அந் நூற்பாயிரத்தில் அவை காணப்படுதல் ஒரு வியப்பன்று. அஃது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட தன்று என்பது எற்றாற் பெறுது மெனின்; - ஐந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட 'திருவாசகம், ‘மணிமேகலை,' 'சிலப்பதிகாரம்,’ ‘அகநானூறு, ‘புறநானூறு, 'கலித்தொகை' முதலான பழைய ல்களிற் சிறிதுங் காணப்படாத யானைமுகக் கடவுள் வாழ்த்தும், நாமகள் வாழ்த்தும் 'புறப்பொருள் வெண்பா மாலை’யிற்

காணப்படுதல்கொண்டு பெறுதுமென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/120&oldid=1588486" இலிருந்து மீள்விக்கப்பட்டது