உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

மறைமலையம் - 23

வரலாறுகளையும் விரித்து ஒருநூல் இயற்றினாரென்றலினும் ஒரு பெரும் புரட்டும் பொய்யும் வேறுண்டோ?

L

இன்னும், இருக்கு வேதத்திற் பல பதிகங்களை இயற்றின வரும், பாரத இராமாயண நிகழ்ச்சிகளில் தொடர்புற்று நின்றவரும் ஆன அகத்தியர் ஒருவரோ பலரோவென்பது விளங்கிற்றில தேனும் அவர் சுந்தரமூர்த்தி நாயனார்க்கு ஆயிர ஆண்டுகளுக்காவது முற்பட்டவராதல் வேண்டுமென்பது மட்டும் அந் நூல்களால் விளங்காநிற்கும். அவ்வாறு அவர்க்கு மிக முற்பட்ட அகத்தியர் தமக்குப் பன்னெடுங்காலம் பிற்பட்ட சுந்தரமூர்த்தி நாயனார் வரலாற்றினையும் ஏனை நாயன்மார் வரலாறுகளையும் விரித்து 'அகத்திய பக்த விலாசம்' என்றொரு நூலியற்றினாரென்றலும் ஒரு முழுப்புரட்டேயாம். ஆசிரியர் சேக்கிழாரால் அருளிச் செய்யப்பட்ட 'திருத்தொண்டர் புராணத்தின்’ அருமை பெருமையினைக் கண்டு வயிறெரிந்த பார்ப்பனர், அதனைத் தனித் தமிழ் நூல் என்று கொள்ளுதற்கு மனம் பொறாமல் வடமொழியிலிருந்து மொழிபெயர்த்துச் செய்ததெனப் பிறர் அதனை மயங்கிக்கொள்ளும்பொருட்டு, அத் தமிழ நூலைப் பார்த்து வடமொழியிற் பலவழுக்கள் மலிய எழுதி வைத்து, அங்ஙனம் எழுதிவைத்த அவற்றுக்கு 'உபமத்யு பக்தவிலாசம்,’ ‘அகத்திய பக்தவிலாசம்' எனப் பொய்ப் பெயர்கள் கட்டிவிட்டுப், பின்னர் அவற்றைப் பார்த்துச் சேக்கிழார் பெரியபுராணம் பாடினாரென ஒரு பெரும் பொய்க்கதையும் வழங்கலாயினர்.

இனி, ஆரிய

ய பார்ப்பன ஆரிய

முறையைத் தழுவின பார்ப்பனர் இவ்வளவின் அமையாது. அகத்தியனார் தென்னாடு போந்து தமிழ்க்கு இலக்கணஞ் செய்த பின்னரே தமிழ் சீர்திருத்தமுற்று நடை பெறலாயிற்றெனவும், இவர்பாற் றமிழுணர்ந்த தால்காப்பியனார் யமதக்கினி முனிவரின் மகனாராவ ரெனவும், ஆகவே முனிவரராகிய தொல்காப்பினார் செய்த 'தொல்காப்பியமே' தமிழுக்குச் சிறந்த இலக்கணமாய்த் திகழ்கின்றதெனவும், இவ்வாற்றால் தமிழர்க்குவந்த வாழ் வெல்லாம் ஆரியரால் வந்தனவே யாமெனவும் கூறித் தருக்கா நிற்பர். உண்மையிலே தமிழர்க்கு வந்த சிறப்பெல்லாம் ஆரியராலே வந்தனவாயின் அதனை ஒப்புதலில் இழுக்கென்று மில்லை. ஆனால், இவையெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/119&oldid=1588481" இலிருந்து மீள்விக்கப்பட்டது