உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

2

109

ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவராதல் வேண்டுமெனக் கிளந்த ‘தமிழ்வரலாறுயைடார்’ கூற்றை ஆராய்வாம்; ‘தீக்ஷை’ என்னுஞ் சொல்லும், தீக்ஷையோடு தவமும் பெற்றுச் செல்லும் பிரமஞானிகளினிடமும் “யத்ர ப்ரஹ்ம விதோயாந்தி தீக்ஷயா தபஸா ஸக” என்னும் அதர்வ வேத வுரையின்கட் சொல்லப் பட்டிருத்தலின் தவஞ்செய்து பிறவி யறுப்பார் தீக்ஷையும் பெறுதல் பண்டைக் காலத்திலேயே யுண்டென்பது பெற்றாம். மேலும், உபமந்யு முனிவர் கண்ணபிரானுக்குச் சிவதீக்ஷை செய்தமையும் பாரதம் அநுசாசனி பருவத்துப் பதினான்காம் அத்தியாயத்திற் சொல்லப்பட்டிருத்தலின், இஞ்ஞான்றை வடமொழிச் சிவாகமங்கள் எழுதப்படுதற்கு இரண்டாயிர ஆண்டுகட்கு முன்னரே ஆசிரியன் தகுதியுள்ள மாணாக் கனுக்குத் தீக்ஷைசெய்து ஆட்கொள்ளும் முறையுமுண்டென்பது தெளியப்படும். இவை யெல்லாம் ஆராய்ந்து பார்க்கும் அறிவுமதுகை யின்றித், தீக்ஷை ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பின்புதான் எழுந்ததெனவும், அதனைப்பெற்ற மாணிக்கவாசகர் அவ்வாற்றால் அந் நூற்றாண்டிற்குப் பின்னர்தான் இருந்தவராவரெனவுந் துணிந்து எளிதாகக் கூறுதலில் ‘தமிழ் வரலாறுடையார்' அன்றிமற்று ஏவர் வல்லார்? யாம் மேற்காட்டியவாற்றால் ‘தீக்ஷை' செய்தல் பண்டைநாளிலேயே இருந்தமை நன்கு விளங்குதலின், கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் இருந்த மாணிக்கவாசகப் பெருமானுக்கு அது செய்யப் பட்டமை பொருத்தமேயா மென்க.

ஈண்டுக் காட்டிய உபமந்யு முனிவர் இற்றைக்கு மூவாயிர ஆண்டுகட்குமுன் னிருந்த கண்ணபிரான் காலத்தவரென்பது இனிது னிது புலனாதலின், இற்றைக்கு ஆயிரத்து ஒரு நூறு ஆண்டுகளுக்குமுன் இருந்த சுந்தரமூர்த்தி நாயனார் வரலாற்றையும், அவரால் வழுத்தப்பட்ட ஏனை நாயன்மார் வரலாறுகளையும் விரித்து வடமொழியில் 'உபமந்யு பக்த விலாசம்' என்பதொரு நூல் இயற்றினாரென்றால் முழுப் பார்ப்பனப் புரட்டேயாம். சுந்தரமூர்த்தி நாயனார்க்கு இரண்டாயிர ஆண்டுகள் முன்னிருந்தவரும், “பாலனுக்குப் பாற்கடல் அன்று ஈந்தான் றன்னை என்று (திருவாரூர் அறநெறி) அப்பராற் குறிப்பிக்கப்பட்டவரும் ஆன உபமந்யு முனிவர் அந் நாயனார் வரலாற்றினையும் ஏனை நாயன்மார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/118&oldid=1588476" இலிருந்து மீள்விக்கப்பட்டது