உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

மறைமலையம் - 23

இதுகாறுங் கூறியவாற்றல், திருமூல நாயனார் காலத்திற்கும் அவர்க்கு முற்பட்ட திருவாதவூரடிகள் காலத்திற்கும் முன்னரே மெய்யுணர்வு பரவிய இத் தமிழ் மண்டிலத்தும், தேவர்களுலகிற்கும் மேலதாகிய சதாசிவ மண்டிலத்துந் தமிழ் ஆகமங்களும் தமிழ் வேதங்களும் வழங்கினமை தெற்றெனப் பெறப்படுதலால், அவை தம்மைக் குறிப்பிடுந் திருவாதவூரடிகளும் திருமூலரும், அவற்றின் மொழிபெயர்ப்பாயும் சிற்ப நூல்களாயும் அவற்றின் பெயர் புனைந்து ஆரியர்களால் வகுக்கப்பட்டனவாயும் இஞ்ஞான் றுலவும் வடமொழி யாகமங்களையும் வேதங்களையும் குறிப்பிட்டார். அல்லரென்பதூஉம். திருவாதவூரடிகளாற் குறிப்பிடப்பட்டவை கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட வடமொழி யாகமங்கள் அல்லாமையால் அவர் அவ்வொன்பதாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவராதல் சல்லாதென்பதூஉந் தெளியக் கிடந்தவாறுணர்க. கிருத ஊழிக் கண்ணே வேதம் ஒன்றே யிருந்ததென்றும். அதனை யுணரமாட்டா மாந்தர் பொருட்டே பின்னர்ப் பற்பல வேதங்கள் இயற்றப்பட்டன வென்றும் அநுமான் தன் றம்பியாகிய அறிவுறுத்தினமை மாபாரதம் வனபர்வத்திற் சொல்லப்பட்டிருக்கின்றது. இப் பாரதவுரைக்கு இணங்கவே, பாகவதபுராணமும், "முன் நாளில் ஒரே ஒரு வேதந்தான் இருந்தது. எல்லா மொழிகட்கும் முதலதான பிரணவம் (ஓம் என்பது) ஒன்றுதான் இருந்தது”” என்று உரைத்தலும் நினைவுகூரற்பாற்று. இவ் விரண்டு நூல்களாலும் நுவலப்பட்டது இஞ்ஞான்றுலவும் வேதங்கள் அல்லாமையும் அது தூய மெய்யுணர்வினையே பயப்பதாதலும், ஓம் என்னும் மந்திரத்தின் வரிவடிவம் பொருள் வடிவம் தமிழ்மொழி ன்றற்கே உரியவாதலின் அதனையறிவுறுக்கும் வேதமும் பழைய தனித்தமிழ் வேதமேயாதலும் எமது உரையின் வாய்மையைக் காட்டும் அடையாளங்களா மென்க.

வீமனுக்கு

8

னி, இஞ்ஞான்றுலவும் வடமொழியாகமங்களின் மட்டுமே ‘தீக்ஷை' என்பது சொல்லப்பட்டிருத்தலின், இவ்வாக மங்களுக்குப் பிற்பட்ட காலத்தேதான் அடியார்க்குத் தீக்ஷைப்பேறு இன்றியமையாததாயிற்று; ஆகவே, ஆசிரியன் பால் தீக்ஷைபெற்ற மாணிக்கவாசகர் இவ்வாகமங்கள் பரவிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/117&oldid=1588471" இலிருந்து மீள்விக்கப்பட்டது