உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

2

107

அறியாதார் வெறும் வடிவொப்புமையே பற்றி இவ்இருவேறு சொற்களையும் ஒரு சொல்லெனக் கொண்டு பெரியதொரு குழறுபடை செய்தார். மேலும், தமிழர்க்கு மிகப் பழைய நூலாகிய 'தொல்காப்பியத்’தின் கண்ணே இம் மந்திரம் எனுஞ் சொற் காணப்படுதல்போல, ஆரியர்க்கு மிகப் பழைய நூலாகிய 'இருக்குவேதப்பாடல்களிலாதல், ஏனை ‘எசுர்' 'சாம' வேதப் பாட்டுகளிலாதல், இச்சொல், வழங்குதலைக் கண்டிலம்; மிகவும் பிற்பட்டகாலத்தில் தொகுத்துச் சேர்க்கப்பட்டதாகிய அதர்வவேதத்’தில் மட்டும் ஓர் இடத்தே ‘மந்திரம்' என்னுஞ் சொல் வேண்டுகோளுரை என்னும் பொருளில் வந்திருக்கின்றது. மிகப் பழையதாகிய ‘தொல்காப்பியத்’தில் ‘மறைமொழி' என்னும் பொருளிற் காணப்படும் 'மந்திரம்' என்னுஞ்சொல். அங்ஙனமே மிகப் பழைய ஆரியநூல்களில் எங்கும் அப்பொருளில் வழங்கக் காணாமையின், அது தனித்தமிழ்ச் சொல்லேயாதல் தேற்றமாமென்க. எனவே, மறைந்த அரும்பொருள்களை யுணர்ந்துந் 'திருமந்திர’நூலுக்குப் பொருந்தும் பெயராய் அமைந்த மந்திரம் என்னுஞ் சொல்லுந் தூய செந்தமிழ்ச் சொல்லேயாதல் அறிக.

7

இனிப், பூந்தொடையலுக்குப் பெயராகிய ‘மாலை’ என்னுஞ் சொல் வடமொழியிற் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் துவக்கத்திற் ‘சுபந்து'என்பவரால் இயற்றப்பட்ட ‘வாசவதத்தா’ என்னுங் காவியத்தின்கண்ணே முதன் முதற் காணப்படுவதாகச் செந்தமிழ் மொழியிலோ அது கி.பி. முதல் நூற்றாண்டிலும் அதற்கு முன்னும் இயற்றப்பட்ட சங்கநூல்களில் மிக்கு வழங்குகின்றது. காலத்தால் மிகவும் முற்பட்டதாகிய 'மாலை' என்னுந் தமிழ்ச் சொல்லைக் காலத்தால் மிகவும் பிற்பட்டனவாகிய வடநூல்கள் கட ன்வாங்கி யிருக்க வேண்டுமே யல்லாற், பழைய தமிழ்நூல்கள் அவற்றினின்றும் அதனை யெடுத்தல் ஏலாமை யுணர்க. அதனால், 'திருமந்திரமாலை' என்னும் பெயரிலுள்ள சொற்கள் முற்றுந் தூய செந்தமிழ்ச் சொற்களாதல் பெறப்படுதலால், வ் வுண்மையினை ஆராயாது இப்பெயரை யொரு கருவியாகக் கொண்டு அந்நூலை வடநூலின் மொழிபெயர்ப்பென்று நாட்டப் புகுந்த பார்ப்பனரின் உரை உள்ளீடில்லாப் புரையே யாதல் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/116&oldid=1588467" இலிருந்து மீள்விக்கப்பட்டது