உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

மறைமலையம் - 23

ளாராய்ச்சி களையும் வகுத்துரைக்குந் 'திருமந்திரம்' போன்ற பழைய தமிழ் ஆகமங்கள் தனித்தமிழ் நூல்களேயாமல்லது. அவை வடமொழியினின்றும் மொழிபெயர்த்துச் செய்தன வல்ல வென்பதூஉம், அங்ஙனம் மொழிபெயர்த்துச் செய்தற்கு அவற்றினும் முற்பட்ட வடநூல்கள் சிறிதும் இருந்தில வென்ப தூஉம் கடைப்பிடித் துணர்ந்துகொள்க.

இனி, 'மந்திரம்’ என்னுஞ் சொல் தமிழ்ச்சொல் லென்றாதல் வடசொல்லென்றாதல் உறுதிப்படுத்தல் எளிதில் முடிவதன்று.இஞ்ஞான்று வெளிவந்துள்ள பழைய தனித்தமிழ் நூல்களில்ெலாம் பழையதாகிய தொல்காப்பியத்தின்கண்ணே. “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திர மென்ப.”4

என்று கூறப்படுதலின் ‘மந்திரம்’ என்னுஞ்சொல் மிகப் பழைய காலந்தொட்டே தமிழ்மொழியில் வழங்கினமை பெறப்படும் ‘மந்திரம்' என்னுஞ்சொல்லுக்குப் பொருள் பிறர் செவிக்குப் புலப்படாமல் மறைத்துச் சொல்லுதலே யாமென்பதும் இச் சூத்திரத்தால் நன்குணரக் கிடக்கின்றது. ஆகவே, 'மந்திரம் ‘மறைமொழி' யென்பன ஒரு பொருட்கிளவிகளாதல் பெற்றாம்.

மெய்ப்பொருளுணர்ச்சி பெறுதற்குத் தகுதியில்லாதார் செவிக்கட் சென்று படாவாறு, ஆசிரியன் தகுதியுடைய மாணாக்கர்க்கு மட்டும் செவியறிவுறுத்தும் அரிய மெய்ப் பொருளுரையினையே ‘மந்திரம்” என வழங்குதல் தமிழ்நூல் வழக்கு. மற்று இச்சொல் இப்பொருளிற் பழைய ஆரிய நூல்களில் வழங்குதலை அவற்றுள் யாண்டுங் கண்டிலம். பிற்றை ஞான்றை வடநூல்களில் இச்சொல் இப்பொருளில் வழங்குவது உண்டாலெனின்; அது, தமிழ் நூற்பொருள் பற்றிய வழக்கும் வடமொழிக்கட் கலந்தபின் உண்டாயதாகலின், அது வினாவன்றென மறுக்க பழைய ஆரிய நூல்களிற் காணப்படும் ‘மந்திரம்” என்னுஞ்சொல் தேவரை வேண்டிப் பாடிய பாட்டுகள் மேற்றாய வருதலின்5 மறை மொழியெனப் பொருள் பயக்கும் ‘மந்திரம்” என்னுந் தமிழ்ச் சொல்லும், வேண்டு கோளுரை யெனப் பொருள் பயக்கும் ‘மந்திரம்’ என்னும் வடசொல்லும் வேறுவேறாதல் பெறப்படும்; இப்பொருள் வேற்றுமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/115&oldid=1588462" இலிருந்து மீள்விக்கப்பட்டது