உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

105

அருளிச்செய்தார். தெற்கின்கண்ணதாகிய பொதியமலை தொட்டு, வடக்கின்கண்ண தாகிய கைலைமலை (நொடித்தான் மலை) காறுந் தமிழ்த் தெய்வமாகிய சிவபிரான் வழிபாடே பரவியிருந்தமை திருஞான சம்பந்தப் பிள்ளையார் அருளிச் செய்த “கயிலையும் பொதியிலும் இடமென உடையார்”3 என்னுந் திருமொழியானுந் துணியக் கிடத்தலானும், அஞ்ஞான்றிருந்த சிவபிரான் றிருத்தொண்டர்க ளெல்லாரும் சிவபிரானைப் பாடியதூஉம், சிவ பிரான்றன் முதன்மைத் தன்மைகளை ஆராய்ந்து விளக்கி வரைந்து வைத்த தூஉம், தமிழ்மொழிக்கண் அல்லாமல் வடமொழிக்கண் இன்மை யானும், அன்றி அத்தகைய நூல்கள் வடமொழிக்கண் உளவேல் அவை வ்விவையென்று உண்மைச் சான்றுகளோடு காலவரையறை செய்து எவரும் இதுகாறுங் காட்டாமை யானும், பழைய உபநிடதங்கள், பாரதம், இராமாயணம் முதலான இதிகாசங்கள், மற்சபுராணம் முதலான இரண்டு மூன்று பழைய புராணங்கள் முதலிய வடநூல்களில் அருகி ஒரோவிடங்களிற் சிவபிரானைப் பற்றிக் காணப்படுங் குறிப்புகள் ‘திருமந்திரம்’ ‘ஞானாமிர்தம்' முதலியவற்றுட் காணப்படும். விரிந்த நுண்ணிய மெய்யுரைகட்குத் தினைத்தனையும் ஈடாகாமையானும் அச் சிறு குறிப்புகடானும் அச்சிறு ஆரியராலன்றி ஆரியர்க்கு அறிவு கொளுத்தும் பொருட்டுத் தமிழ் மேன்மக்களாற் சுருக்கமாகக் குறித்துவைக்கப் பட்டவை யாகலானும் வடநூல்களிற் சிவபிரான் முழுமுதற் றன்மைகளும் முப்பொரு ளாராய்ச்சிகளுமே விரிந்து விளங்கிக் கிடந்தன வாயின் அவற்றைப் பயில்வாரெல்லாம் சிவநேயம் மிக்கவர்களா யிருத்தல் வேண்டுமாக மற்று அவரெல்லாம் சிவத்துக்கும் சைவத்துக்கும் முற்றும் மாறாய் நிற்றலைக் காண்டுமாகலானும், தமிழ் நூல்களைச் சிறிதளவு பயின்றாரும் சிவநேயம் மிக்கு அறிவு நூலாராய்ச்சியிற் றலைப்படுதல் நாளுங் கண்டாமாக லானும், இஞ்ஞான்று வழங்கும் ஆகமங்களிற் சொல்லப்பட்ட முறைப்படி கட்டப்பெற்று நடைபெறும் பெரிய பெரிய சிவபிரான் திருக்கோயில்க ளெல்லாம் தமிழ்நாட்டிலன்றி வடநாட்டின்கண் இல்லாமை எவருந் தெளியவறிந்ததொன் றாகலானும், சிவபிரானையும் அவற்கு வழிபாடாற்று முறைகளையும் கடவுள் உலகம் உயிர் என்னும் முப்பொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/114&oldid=1588457" இலிருந்து மீள்விக்கப்பட்டது