உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

14. மந்திரம் என்னும் சொல் தூய தமிழ்ச்சொல்

இங்ஙனம் ஆரியப்புரட்டைத் தழுவின பார்ப்பனர் ஒருவர் ஏதொரு சான்றுங் காட்டாமல், 'திருமந்திரம்' வடமொழி யாகமத்தினின்றும் மொழிபெயர்த் துரைக்கப்பட்ட தென்று ஒரு பொய்யுரை கூறினாராயின். அவர் கூற்றை ஆராய்ந்த மேன்மக்கள் அதற்கு ஏதொரு சான்றுங் காணாமையின் அதனை வெறும் போலிப் பொய்க்கூற்றெனவே அகற்றாநிற்பர் என்க. திருமந்திரம் முதன்முதற் றமிழிலேயே ஆசிரியர் திருமூல நாயனாரால் இயற்றப்பட்டதா மென்பதனை மேலே விளக்கிக்காட்டினாம். மேலும், “தமிழ் மண்டலம் ஐந்தும் தாவிய ஞானம்” என்று திருமூலரே அருளிச்செய்தலின், அவர் காலத்தில் ஐவகையாய்ப் பகுக்கப்பட்டு விரிந்துகிடந்த தமிழ்நாடு முழுதும் ஞான (அறிவு) நூலாராய்ச்சியே விரிந்து கிடந்தமை பெறப்படுதலானும், “சதாசிவந் தத்துவம் முத்தமிழ் வேதம்" (திருமந்திரம் -149) என்று அவர் அருளிச்செய்யு மாற்றாற், படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழிலைச் செய்யுந் தேவர்க்கும் மேல் வைகி அவர்க் கெல்லாந் தலைவராய் நிற்கும் சதாசிவ நாயனார் தம் தூய மாயாவுலகங்களிலும் இயல் இ சை நாடகமென்னும் முப்பகுப்பாய் விளங்கும் அருந்தமிழ் மொழிக்கண் இறைவன் அவர்பால் நின்றும் அருளிய தமிழ் வேதமே வழங்குதல் பெறப்படுதலானும், தமிழ்மக்கள் உலவுந் தமிழ்நாடுகளினும் தேவர்களுலவும் மேன்மேலுலகங்களிலும் தமிழ்வேந்தங்களுந் தமிழ் ஆகமங்களுமே வழங்கினமை தெற்றெனத் துணியப்படும். தேவர்க்கும் எட்டா நிலைக்கண் தமிழ்வேத ஆகமங்கள் வழங்குதல் கண்டே திருநாவுக்கரசு நாயனாரும் “அமரர் காணா மறைவைத்தார்.”2 என்று அவை தம்மைக் கருத்துட்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/113&oldid=1588452" இலிருந்து மீள்விக்கப்பட்டது