உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

115

நூற்றாண்டிற் கடைச்சங்கத் தலைமைப் புலவராய் வயங்கிய ஆ சிரியர் நக்கீரனார், மகளிர் கூந்தற்கு இயற்கை மணம் உண்டென பதை அவர்க்கு அறிவித்தற்பொருட்டு வடக்கிருந்து மலைய மலையில் வந்திருந்த அகத்தியர் என்பார் அவர்பால் வருவிக்கப் பட்டு அவர்க்கு அவ்வுண்மையினை அறிவுறுத்தினா ரெனவும் ஒரு வரலாறு பெரும்பற்றப்புலியூர் நம்பி, தாம் இயற்றிய 'திருவிளையாடற் புராணத்’திற் பாடியிருக்கின்றார். துகொண்டு உள்ளதை உள்ளவாறே எடுத்துரைக்கும் தூய தமிழ்ச்செய்யுள் வழக்கோடு, உள்ளதற்கு மாறாவதும் இல்லாதவற்றை யெடுத்துரைப்பதுமாகிய வடமொழிச் செய்யுள் வழக்கும் தமிழ்மொழிக் கண் வந்து கலந்தமையும், அங்ஙனம் அதுவந்து கலத்தற்கு ஏதுவாய்நின்ற அகத்தியர் என்னும் வடநாட்டு முனிவரின் வருகையும் எல்லாம் ஆசிரியர் நக்கீரனார் காலத்தில் நிகழ்ந்தன வாதல் நன்கு பெறப்படும். படவே, நக்கீரனார் காலத்தவராகிய அகத்தியரே தமிழ்நாடு புகுந்தவரல்லாமல், அவர்க்குமுன் அப்பெயர் புனைந்தார் பிறர் ஒருவர் ஈண்டு வந்தமைக்கு ஏதொரு சான்றும் மிகப் பழைய தமிழ்ச் செய்யுட்களில் எட்டுணையுங் காணப்படாமையின், நக்கீரனார்க்கு மூவாயிரத்து நானூறு ஆண்டுகட்கு முன்னிருந்த ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியனாரை அகத்தியனார் மாணாக்கரென்றல் பெரியதொரு புரட்டுரையேயா மென்க. அவற்றன்று அகத்தியர் என்னும் முனிவர் தாம் இருக்கும் உடலத்திலேயே இறப்பின்றி எத்தனையோ நூறாயிரம் ஆண்டு உயிரோடு இருப்பவராகலின், நக்கீரனார்க்குப் பல்லாயிரம் ஆண்டு முன்னிருந்த அகத்தியரே நக்கீரனார் காலத்தும் இருந்தாரெனக் கொள்ளாமோவெனிற்; காள்ளாம். நூறாண்டிற்கு மேல் இரு நூறாண்டிற்குள்ளாக உயிர் வாழ்வார் சிலர் தம்மையே அருகி ஒரோவிடத்துக் காண்கின்றாமன்றி, இருநூறாண்டிற்குமேல் உயிரோடிருந் தாரை யாண்டுங் காணாமையானும், மிகப் பழையதாகிய 'ஈசாவாசியோ பநிடதம்' மக்கள் வாழ்நாளை நூறாண்டின் அளவாகவே வைத்து வரையறுத்துக் கூறுதலானும்,13 எங்கும் நிகழும் உண்மை நிகழ்ச்சிக்கு மாறாக அங்ஙனம் அகத்தியரென்பாரைப் பன்னூறாயிரம் ஆண்டு ஒருபடலத் திலேயே உயிர் வாழ்வாராக உரைப்பது வரலாற்று நூலாரின் உண்மை யாராய்ச்சிக்கு ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/124&oldid=1588505" இலிருந்து மீள்விக்கப்பட்டது