உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

மறைமலையம் - 23

சிறிதும் இசையாதென விடுக்க. ஆகவே, இருக்குவேத காலத்து அகத்தியரும் நக்கீரனார் காலத்து அகத்தியரும் வேறு வேறாவர் என்பதூஉம் நக்கீரனார் காலத்து அகத்தியரே தமிழ்நாடு புகுந்தவராவ ரென்பதூஉம் துணிபொருளாமென்க.

அற்றேல், இராமன் என்னும் வடநாட்டு மன்னன் ஒருவன் இலங்கையில் அரசுபுரிந்த இராவணன் என்னும் அரசன்மேற் படையெடுத்துவந்த ஞான்று. அகத்தியர் இருந்த பாழிக்குச் சென்று அவரால் வரவேற்கப்பட்டானென வடமொழி வான்மீகி இராமாயணம் புகலாநிற்கின்றது. அதனால், அகத்தியர் இராமன் காலத்தவரென்பது புலனாதலின், அவர் தென்னாட்டின்கட் புகுந்தது நக்கீரனார் காலத்துக்குப் பன்னூறாண்டின் முன்னரே யாதல்வேண்டும்; ஆகலான், அவரை நக்கீரனார் காலத்தவராக ஓதுங் கதை பொய்யாகவே காள்ளற்பால தெனின்; அற்றன்று; இராமாயணத்தின்கட் சொல்லப்பட்ட கதையை உண்மையென்று நம்பத் தலைப்பட்டமையால்வந்த குழறுபடைகட்கு ஓர் அளவே யில்லை. அக்கதை உண்மையாக நடந்ததன்று. உலக இயற்கையிற் காணப்படும் நிகழ்ச்சிகள் சில, வல்லோன் ஒருவனால் ஒரு கதையாக ஆக்கப்பட்டன. இருக்குவேதத்திற் சீதை யென்னும் அணங்கு வயல் நிலங்களுக்குத் தெய்வமாகவும் உழவுசாலாகவும் சொல்லப்படுகின்றாள்; மழைக் கடவுளாகிய

இந்திரன் அச் சீதைக்குக் கணவனாகவும் ஆண்டே

16

சொல்லப்படுகின்றான்." இதற்கு ஏற்பவே, வான்மீகியார், தமது இராமாயணத்தும் சீதை நிலத்தின்கண் உழவுசாலினின்றும் பிறந்தாள் எனவும், மறித்தும் முடிவுநாளில் நிலத்தின்கண்ணே மறைந்து போயினாளெனவும் புகன்றார்.15 “ராம் என்னுஞ் சொல் இந்திரனுக்குரிய ஒரு பெயராகவே இருக்குவேதத்திற் பல பதிகங்களினுங் காணப்படுகின்றது. ஆகவே, மழைக் கடவுளுக்கும் நில மகளுக்கும் உள்ள இயற்கை இயைபே. பின் வந்த புலவோரால் இராமனுக்கும் சீதைக்கும் இடைநிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியாக வைத்து ‘இராமாயணம்' என்னும் ஒரு கதையாகக் கட்டப்பட்டது; இஃது "இல்லோன் தலைவனாக இல்லது து புணர்க்கும் நாடகவழக்குப்" பற்றி வந்ததென்பதனை அறியாதார் இது தன்னை மெய்யாக நம்பி அதனாற் பெரிதும் இடர்ப்படுவாரயினர். இஃது இல்லது புணர்க்கும்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/125&oldid=1588509" இலிருந்து மீள்விக்கப்பட்டது