உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

17

117

நாடகவழக்குப் பற்றி வந்ததென்பதனை நன்காராய்ந் துணர்ந்த புலவோரெல்லாம் இராமாயணத்'தை ஒரு வரலாற்ற நூலெனக் கொண்டிலர்." கிறித்து பிறப்பதற்கு 380 ஆண்டுகளுக்கு முன்னமே எழுதிவைக்கப்பட்ட புத்தசமய நூலாகிய 'ஜாதக்காதைகளுள்' ஒன்றாகிய ‘தசரத ஜாதகம் என்பது இராமன் கதையைக் கூறுகின்றது. தசரதன் என்னும் அரசன் தன் இரண்டாம் மனைவிக்கு அஞ்சித், தன் முதன் மனைவியின் மக்களாகிய இராமன், இலக்குமணன், சீதை என்னும் மூவரையும் தான் இறக்கும் பன்னிரண்டு ஆண்டு அளவும், தனது நகரத்தைவிட்டுச் சென்று வேறொரு நகரத்திலேனும் அன்றியொரு காட்டிலேனும் மறைந்திருந்து, தான் இறந்தவுடன் திரும்பிவந்து தனது அரசியலைக் கைக்கொள்க வென ஏவினா னெனவும், அங்ஙனமே அம் மூவரும் இமயமலைச் சாரலிற் சென்று வைகிப் பன்னீரியாண்டு கழிந்தபின் தம் நகரத்திற்குத் திரும்பிவந்தனரெனவும், திரும்பிவந்த அம்மூவரும் மூத்தவனாகிய இராமன் சீதையை மணந்துகொண்டு செங்கோல் ஒச்சினானெனவும் அத் தசரத ஜாதகம் புகலா நிற்கின்றது. இதன்கட் சீதையை இராமனோடு உடன் பிறந்த தங்கையாகவும், பின்னர் அவளையே அவன் மணந்து கொண்டதாகவும் சொல்லுங் கதையை உற்று நோக்குமிடத்து, இஃது உண்மையாக நடந்த தன்றென்பதூஉம் வானும் நிலனும் படைப்புக் காலத்தே மாயை என்னும் ஒரு முதற்பொருளினின்றே தோன்றுதல்பற்றி அவ்வானின் தெய்வமாகிய இராமமெனன்னும் இந்திரனும் நில அணங்காகிய சீதையும் உடன்பிறந்தவரென்று ஓதப்படு வாராயின ரென்பதூஉம், பின்னர் அவ்வானினின்று பொழியும் மழையும் அம் மழையை ஏற்கும் மருதநிலமும் கணவனும் மனைவியும் இயைதல் போலுதலின் இராமனுஞ் சீதையும் L மணந்து கொண்டாரென அவ்வாறு அதன்கட் கூறப்படு வாராயின ரென்பதூஉம் நன்கு விளங்கா நிற்கும். இவ்வளவே அத் ‘தசரத ஜாகத்'திற் சொல்லப்பட்ட தல்லாமல், இராமன் தெற்குநோக்கிச் சென்றானெனவாதல், அவன்றன் மனைவி ராவணன் எடுத்துப் போயினா னெனவாதல், குரங்குகளைப் படைதிரட்டிக்கொண்டு இலங்கை ஏகி இராவணனொடு பொருது அவனை மடித்துச் சீதையை

L

யாகிய சீதையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/126&oldid=1588514" இலிருந்து மீள்விக்கப்பட்டது