உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

  • மறைமலையம் 23

மீட்டு வந்தானெனவாதல் அதன்கண் ஏதுஞ் சொல்லப் படவில்லை. அதன்கட் காணப்படாத இவையெல்லாம் அத் தசரத ஜாதகத்திற்குப் பின்னெழுந்த வான்மீகி இராமாயணத் தின்கட் புதியவாய்ச் சேர்க்கப்பட்டனவாதல் வேண்டுமென்பது இதனால் நன்கு புலனாகின்றதன்றோ?

19

18

அங்ஙனமாயின், 'வான்மீகி இராமாயணம்' என்பது ‘தசரத ஜாதகத்' திற்குப் பின் உண்டான தொன்றென்று கோடற்கு மேற்கோள் என்னையெனின்; பௌத்த வேந்தனாகிய அசோகனது கால்வழி ஒடுங்கியபின் கி.மு.185திற் சுங்கமரபினை நிலைநாட்டிய 'புஷ்பமித்திரன்' (புஷ்யமித்திரன்) பௌத்த மதத்திற்குப் பெரும் பகைவனாய்த் தோன்றிப் பார்ப்பன வேள்வி மதத்தைப் பெரிதும் பரவச் செய்த காலத்திலேதான் பௌத்த மதம் மிகவும் இகழ்ந்து பேசப்படுவதாயிற்று. ப இவ்வாறு பௌத்த மதத்தை இழித்துரைக்கும் உரை ‘வான்மீகி இராமாயணத்'தின் டை யே' ை காணப்படுதலின், இது பளத்தமதம் ஒடுங்கிய புஷ்பமித்திரன் காலத்தில் இயற்றப்பட்ட தென்னும் உண்மை இனிது புலனாம். மேலும், அப் புஷ்பமித்திரன் காலத்தில் இருந்த 'பதஞ்சலி முனிவர்' பாணினி முனிவரது வியாகரணத்திற்கு வகுத்த பேருரையின் குறிப்பு. அவ் வான்மீகி இராமாயண உத்தர காண்டத்தின் 36ஆவது சருக்கத்தின்கட் காணப்படுதல் கொண்டும். விராமாயணம் எழுதப்பட்ட காலம் அப் பதஞ்சலிமுனிவ ருரைக்கும் பிற்பட்டதென்பது துணியப்படும். ஆகவே, தசரத ஜாதகத்திற்கு இருநூறாண்டு பிற்பட்டுத் தோன்றிய வான்மீகி இராமாயணம். அத் தசரத காதையிற் காணப்படாத கதைகளைப் புதியவாகப் படைத்திட்டுக்கொண்டு பார்ப்பன மதத்தைத் தென்னாட்டிற் பரப்ப முயன்றமை தெள்ளிதின் விளங்கும். இராமன் தன் தந்தையின் ஏவலால் இமயமலைச் சாரலிற்சென்று வைகினானென்று தசரத காதை கூறாநிற்க.

வ்

இராமாயணமோ அவன் விந்தமலைக்குத் தெற்கே

'தண்டகாரணியத்'தில் வந்து சேர்ந்தான் என்றது. இதனாற், பண்டைப் பார்ப்பனர் தமது கொள்கையைத் தெற்கே கொணர்ந்தமை பெறப்படுமே யல்லாமல், இராமன் தெற்கே போந்தமை பெறப்பட மாட்டாது. இனி, இலங்கை வேந்தனாகிய இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றதும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/127&oldid=1588519" இலிருந்து மீள்விக்கப்பட்டது