உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

の

124

மறைமலையம் - 23

26

ளுக்கு அவர் உரை எழுதின காலந்தொட்டுப் 'பிரத்திய பிஞ்ஞை' என்னும் சைவக் கொள்கை. காசுமீரத்திற் பரவத் துவங்கி, அவர் வழியில் வந்த அபிநவ குப்தர், 'க்ஷேமராஜா' என்பவர்கள் காலம் வரையில் அஃதாவது கி.பி பதினோராம் நூற்றாண்டு வரையில் அந்நாட்டில் திகழ்ந்ததொன்றாம். ப் பிரத்திய பிஞ்ஞா தரிசனத்திற்கு முதல் நூலாகிய 'சிவ சூத்திரங்கள்,' சிவாகமங் களாகிய சைவ தந்திரங்களினின்று தோன்றினவாமென்றும், இச் சைவதந்திரக் கொள்கைகள் தென்னாட்டிலே வளர்ந்து ஓர் ஒழுங்கான கோட்பாடாகக் கி.பி. முதல் நூற்றாண்டுகளிலே முறைப் படுத்தப்பட்டன வென்றும், சைவ தந்திரமானது வடக்கே சென்று கூர்ச்சர நாட்டில் லகுலீசபாசுபதம்' ஆகவும், காசுமீரத்திற் 'பிரத்திய பிஞ்ஞா தரிசனம்' ஆகவும் வழங்கலாயிற்றென்றும் இவற்றை நன்காய்ந்த திருவாளர் சீநிவாச ஐயங்காரவர்கள் இனிது விளக்கிக் காட்டி யிருக்கின்றார்கள்.27 இவ்வாறு சிவாகமங்களும் அவற்றின் கோட்பாடுகளும் இத்தென்றமிழ் நாட்டிற் பிறந்து வளர்ந்து ருப்பெற்றச் சைவ சித்தாந்தத் தனி முதல்களாயிருப்பவும், இவையே வடக்கே சென்று 'பிரத்திய பிஞ்ஞா தரிசனத்தைக்’ காசுமீரத்தில் தோற்றுவித்தனவா யிருப்பவும், இவ் வுண்மையை அடியோடு புரட்டி வடநாட்டுப் 'பிரத்திய பிஞ்ஞை யே’ தமிழ்நாட்டுச் சைவ சித்தாந்தத்திற்குத் தாயகமாயிற்றென்று திருமந்திரப் பதிப்பின் முகவுரையில் எழுதிய பார்ப்பனர் தமது கொள்கையை நாட்ட வேறு யாதுதான் சொல்லார்! காசுமீரத்தில் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் பிற்பாதியிற் றுவங்கிய பிரத்திய பிஞ்ஞையானது, அதற்கு முன்னரே கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தமிழ்நாடெங்கணும் பரவியிருந்ததும், 'திருமந்திரநூற் களஞ்சியத்தில் மிகுதியாகச் சேர்த்து வைக்கப்பட்டதுமாகிய ‘சைவ சித்தாந்தத்'திற்குத் தாயகமா மென்றல் என் முப்பாட்டனைப் பெற்றவன் யான் என்பானுரையோடொப்ப வைத்து எள்ளி நகையாடற் பாலதாமென விடுக்க. இவ்வாற்றாற், பழைய சிவாகமங்கள் என் றோதப்பட்டன னவெல்லாம் 'திருமந்திர நூலை’யொப்பத் தமிழ்நாட்டில் தமிழ் மொழியிலேயே ஆக்கப்பட்ருந்தனவேயா மென்பதூஉம், திருவாதவூரடிகளாலுந் திருமூலநாயனாராலுங் குறிப்பிடப்பட் ஆகமங்களென்பன கி.பி. மூன்றாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/133&oldid=1588547" இலிருந்து மீள்விக்கப்பட்டது