உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 2

வ்

125

நூற்றாண்டிற்கு முன்னிருந்த தமிழாகமங்களே யல்லாமற் பண்டைத் தமிழ்த் தச்சுநூல்களின் மொழிபெயர்ப்பாய் இஞ்ஞான்று உலவும் லவும் ‘காமிகம்,' காரணம்' முதலான வடநூல்கள் ஆகா வென்பதூஉம், இவ் வாகமங்களுக்கு உபாகமங்களாய்ப் பின்னர்ச் சேர்க்கப்பட்டிருக்கும் 'பௌட்கரம்,' 'மிருகேந்திரம்' முதலான வடநூல்களே பண்டைத் தமிழ்ச் சிவாகமங்களினின்றும் மொழிபெயர்த்த அறிவுப் பெருநூல்களாம் சிவாகமங்கள் ஆகுமல்லது ஏனைக் 'காமிகம்,' முதலாயின சிவாகமங்கள்

அச்

ஆதல்

செல்லாதென்பதூஉம் உணர்ந்துகொள்க. இங்ஙனமாகத் திருவாதவூரடிகளாற் குறிப்பிடப்பட்ட ‘ ஆகமங்கள்' கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பின் மொழிபெயர்த்துச் செய்யப்பட்ட‘காமிகம்' முதலிய வடநூல்கள் அல்லாமையால், இவ் வுண்மையை ஆராய்நது பாராமல், ஆகமம் என்றதே பற்றி வை தம்மையே அடிகள் குறித்தார் எனப் பிறழக் கொண்டு, அவ்வாற்றால் அடிளது க காலத்தைக் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பின்னதாக்கப் பெரிது முயன்ற ‘தமிழ் வரலாறு' உடையாரது முயற்சி வெறும் பாழாய் முடிந்தமை

காண்க.

காமிகம் ’

அஃதொக்குமாயினும், முதலியன திருக்கோயில் கள் கட்டுவிக்கும் முறைகளை வகுத்தல்பற்றி அவை தமிழிலிருந்த பண்டைத் தச்சு (சிற்ப) நூல்களினின்றும் மொழிபெயர்த்துச் செய்தனவாமென்று மேலே கூறிய தென்னை? தமிழில் தச்சு நூல்கள் உண்மைக்கு மேற்கோள் கண்டிலமாலெனின்; அறியாது வினாயினாய்; கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இடையிலிருந்த ‘வராகமிகிரர்’ தாமெழுதிய 'பிருகத்சம்ஹிதை'யில் 'நக்நஜித்' என்னுந் திராவிடரால் எழுதப்பட்ட ‘சிற்பசாஸ்திரம்' ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லுதல் கொண்டு.28 கி.பி. ஆறாம் நூற்றாண்டின் கண் இருந்தமை நன்கு புலப்படும். அதனால், திருக்கோயில் அமைக்கும் வகைகளை விரித்துரைக்கும் ‘காமிகம்’ முதலிய நூல்கள், பழையகாலத் திருந்த தமிழ்த்தச்சு நூல்களின் மொழி பெயர்ப்பாதல் ஒரு தலையாமென்க. 'காமிகம்' முதலியவற்றிற் காட்டிய முறைப்படி அமைக்கப்பட்ட பழைய சிவபிரான் திருக்கோயில்கள் இத் தென்றமிழ் நாட்டிலன்றி, வடநாட்டின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/134&oldid=1588552" இலிருந்து மீள்விக்கப்பட்டது