உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

2

ல்

மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால் தன்னாக வேகொண்டு சன்மம்செய் யாமையுங் கொள்ளுமே.”

என்று நம்மாழ்வாரும் ஒரு பதிகம் பாடினமை காண்க.

66

அறுசுவையுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட

மறுசிகை நீக்கியுண் டாரும் -வறிஞராய்ச்

சென்றிரப்பர் ஓர் இடத்துக் கூழ்எனின் செல்வமொன் றுண்டாக வைக்கற்பாற் றன்று.

“யானை யெருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச் சேனைத் தலைவராய்ச் சென்றோரும் -ஏனை வினையுலப்ப வேறாகி வீழ்வர்தாங் கொண்ட மனையாளை மாற்றார் கொள'

وو

என்னும் நாலடியார் செய்யுட்பொருளை யெடுத்து, “உய்ம்மின் திறைகொணர்ந் தென்றுல காண்டவர் இம்மையே தம்மின் சுவைமட வாரைப் பிறர்கொள்ளத் தாம்விட்டு வெம்மி னொளிவெயிற் கானகம் போய்க்குமை தின்பர்கள்

என்று நம்மாழ்வார் பாடியிருக்கின்றனர்.

கரைபொரு திரங்குங் கனையிரு முந்நீர்த் திரையிடு மண லினும் பலரே யுரைசெல மலர்தலை யுலகம் ஆண்டுகழிந் தோரே”

என மதுரைக் காஞ்சியிலும்,

66

“தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்

நெடுவரை இழிதரு நீத்தஞ்சால் அருவிக்

கடுவரற் கலுழிக் கட்கின் சேயாற்று வடுவாழ் எக்கர் மணலினும் பலரே’”

135

(235-237)

(553-556)

என மலைபடுகடாத்திலும் போந்த சொற்பொருள்களை

எடுத்துக்கொண்டு,

“நினைப்பான் புகில்கடல் எக்கரில் நுண்ம ணலிற்பலர் எனைத்தோர் உகங்களும் இவ்வுல காண்டு கழிந்தவர்”

என்று நம்மாழ்வார் பாடினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/144&oldid=1588572" இலிருந்து மீள்விக்கப்பட்டது