உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

66

மறைமலையம் - 23

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள

وو

என்னுந் திருக்குறளின் சொற்பொருளை யெடுத்துக்,

“கண்டுகேட் டுற்றுமோந் துண்டுழலும் ஐங்கருவி கண்டஇன்பம் தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்"

என்று நம்மாழ்வார் பாடுதல் காண்க.

66

“அப்பன்நீ அம்மைநீ ஐயனும்நீ

அன்புடைய மாமனும் மாமியும்நீ

ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ”

(1101)

என்னும் திருநாவுக்கரசு நாயனார் திருப்பாட்டைப் பார்த்துச், “சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும் மேலாகத் தாய்தந்தையும் அவரேயினி யாவாரே

என ஐந்தாம்பத்தின் முதற்பதிகத்தில் நம்மாழ்வார் ஓதுகின்றனர்.

"ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்

நீராக நீளும்இந் நோய்"

(1147)

என்னுத் திருக்குறளின் சொற்பொருள்களைக் கிடந்தபடியே யெடுத்து,

66

'ஊரவர் கௌவை எருவிட் டன்னைசொல் நீர்ப்படுத்து"

என்று நம்மாழ்வார் பாடுதல் காண்க.

இன்னுந் 'திருவாசகத்தைப் பயின்று அதிலுள்ள சொற் பொருள்களையும், திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய திருப்பதிகங்களில் மிகப் பழகி அவற்றின் சொற்பொருள் களோடு இசைகளையுந் தழுவி நம்மாழ்வார் பாடியிருக்குஞ் செய்யுட்களையும் எடுத்துக் காட்டப்புகின் இது மிக விரியும். அதுவேயுமன்றித் 'தமிழ் வரலாறுடையார்' திருவாசகத்தைப் பார்த்து நம்மாழ்வார் பாடினாரல்லர் என வழக்கிடுதலால், வழக்கிலுள்ள அதனை எடுத்துக்காட்டுதற்கு அமர்ந்திலம்

என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/145&oldid=1588573" இலிருந்து மீள்விக்கப்பட்டது