உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

2

137

முன்னர் எடுத்துக்காட்டிய பழந்தமிழ்ச் சான்றோர் செய்யுட் சொற்பொருள்களை நம்மாழ்வார் தாமியற்றுஞ் செய்யுட்களிற் றழுவிக் கூறுகின்றுழிச், 'சண்டாளர்’ ‘மனிசர்', ‘சன்மம்’, ‘எக்கல்’, ‘உகம்' என்னும் பிற்காலத்து மக்களின் கொச்சைத் தமிழ்ச்சொற்களை எடுத்து வழங்கக் காண்டலானும், இன்னோரன்ன சொற்கள் தேவார திருவாசகங்களினும் அவற்றிற்கு முற்பட்ட தமிழிலக்கியங் களினுங் காணப் படாமையானும், நம்மாழ்வார் திருவாய் மொழி பாடிய காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டிலாதல் அதற்கும் சிறிது பின்னாதல் கொள்ளப்படும். இன்னும், பவித்திரன், 'சாதுவன், 'கருமபலன்’ சன்மசன்மாந்தரம்' 'விரோதம்’, ‘காலசக்கரம்’, 'கலியுகம்’, கிதியுகம்’, ‘விசாதி' (வியாதி), 'கீர்த்தித்து’, 'வைட்டணவர்’, ‘முக்கியம்’, ‘சுண்டாயம்’,‘விபரீதம்’, 'தன்மபாவம்', 'வெளுமை’ ‘அரவிந்தலோசந்’, ‘கருமகதி’, 'மூர்ச்சிக்கும்’, ‘சராசரம்”,‘சாரதி’ ‘விசித்திரம்', 'விடமம்”, ‘கரசரணம்’, ‘துப்புரவு', 'அன்னவசம்', அமநுராகம்’, சம்மதித்து’, மதுரபோகம்’, ‘பிராக்கள்', ன்றிக்கே' முதலான வடசொற்கள் சொற்றொடர்களும், சில தமிழ்ச்சொற்களும் பிற்காலத்தனவே யல்லாமல், கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டன அல்ல. இவை தம்மைப் பத்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட தமிழ்நூல்களிற் காண்டலியலாது. நம்மாழ்வார் நல்ல செந்தமிழ்நடையிற் பாடிக்கொண்டு செல்லுதற்கு இடையிடையே இச் சொற்கள் சொற்றொடர் களைப் புகுத்தி விடுகின்றாராகலினாலும், திருமால் பெயர்களுள்ளும் முற்காலத்து வழங்காத வடமொழிப் பெயர்களை இவர் மிகுதியா யெடுத்து வழங்குதலினாலும் வடசொற்களும் வைணவக் குறியீடுகளும் தமிழில் மிக்கு விரவத் தொடங்கிய கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரேதான் இவர் ருந்தாராகற்பாலர். வைணவ ஆசிரியரான ஆழ்வார்களின் காலங்களை நடுநிலை வழாது நின்று ஆய்ந்து உரைத்த திருச் சீனிவாச ஐயங்கார் அவர்களும், நம்மாழ்வார் காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டின்கட் படுவதாமெனவே வலியுறுத்தார்.3

மேற்காட்டியவாற்றால் நம்மாழ்வார் தமக்கு முன்னிருந்த பழந்தமிழ் நூல்களையும் சைவத்திருமுறை களையும் நன்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/146&oldid=1588574" இலிருந்து மீள்விக்கப்பட்டது