உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

139

பொருட்டே அவற்றை ‘அந்தாதித் தொடை'யின்பாற் படுத்துப் பாடினாராதல் வேண்டு மென்பதூஉம், ஆகவே நம்மாழ்வார், வைணவ சமயத்தின் பாற் பற்றுடைய ஒரு சிறந்த தமிழ்ப்புலவரே யல்லாமல் இவர் இறைவனை நேரே கண்டு அவன்பால் அன்பு மீதூரப் பெற்று அவனருளைப் பெறுவான் வேண்டிநினைந்த நினைந்த போழ்தெல்லாம் நெஞ்சம் நெக்குருகிப் பாடினாரல்ல ரென்பதூஉம், அதனால் அவர்பால் ஏதொரு கடவுட்டன்மையுங் காணப்பட்டில தென்பதூஉம் தெற்றென விளங்காநிற்கும்.

அற்றேல், மாணிக்கவாசகரும், 'திருச்சதகம் ச்சதகம்’ நூறு செய்யுட்களையும், 'நீத்தல் விண்ணப்பம்' 'ஐம்பது செய்யுட் களையும் ‘அந்தாதித் தொடை'யின்பாற் படுத்துப் பாடியவா றென்னையெனின்; 'திருச்சதகம்' திருப்பெருந் துறையிலும், ‘நீத்தல் விண்ணப்பம்' திருவுத்தர கோச மங்கையிலும் அடிகளால் அருளிச் செய்யப்பட்டன வாகலின், அவற்றுள் முதல்நூறு ஒரு தொகுதியாகவும், பின் ஐம்பதும் மற்றொரு தாகுதியாகவும் தனித்தனியே பாடப் பட்டிருத்தலானும், ‘திருவாசகத்’ தின்கண் உள்ள ஏனைத் திருப்பதிகங்களும் ஒன்றற் கொன்று தொடர்பின்றித் தனித்தனியே பாடப்பட்டிருத்த லானும், அவை நம்மாழ்வார் பாட்டுக்களைப்போற் செயற்கை யாய் ஒரு தொடர்புபட நில்லாமல். தனித்தனியே நினைந்த நினைந்தவழிப் பேரன்பின் பெருக்கால் இயற்கையாய்ப் பாடப்பட்டன வாகுமென்று தெளிக

கட

இனி, இவையெல்லாம் ஒருபுறம் நிற்க. நம்மாழ்வார் கடவுளை நேரே காணும் பெரும்பேறு பெற்றிலராயினும், முழுமுதற் கடவுளிலக்கணம் இதுதான் என்று ஆராய்ந்துணரும் அறிவு மதுகையும், அதனால் அம் முழுமுதற் கடவுள் ஒன்றனையே வழுத்தும் மன ஒருமைப்பாடு மாயினும் உடையரோவெனின்; அவை தாமும் அவர் உடையரல்ல ரென்பது காட்டுவாம். உலகிற்கு முழுமுதற் கடவுள் ஒருவனே உளன் என்று காட்டாமல், நான்முகன் திருமால் உருத்திரன் எனக் கடவுளர் மூவர் உளர் எனக் கூறி, அம்மூவரில் ஒவ்வொருகால் ஒவ்வொருவரை உயர்த்தி ஏனையரைத் தாழ்த்தி, இந் நாவலந் தீவின்கண் உள்ள உள்ள பொதுமக்கள் அம்மூவரில் ஒவ்வொருவரைப் பற்றிக் கொண்டு வழக்காடிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/148&oldid=1588576" இலிருந்து மீள்விக்கப்பட்டது