உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

மறைமலையம் - 23

போர்புரியவுந், தாம் அப் பொதுமக்களின் வேறாய் நிலவுலகக் கடவுளரென அவர் தம்மாற் பாராட்டப் படவும் சூழ்ச்சி செய்து ஆரியப்பார்ப்பனர் கட்டிவிட்ட புராணப் பொய்க்கதை களையே உண்மையென நம்பி நம்மாழ்வார்,

“பெரிய அப்பனைப் பிரம னப்பனை உருத்திர னப்பனை

எனவும்,

وو

(8 ஆம் பத்து, 1,11)

“தானும் சிவனும் பிரமனும் ஆகிப் பணைத்த தனிமுதலை”

(8 ஆம் பத்து, 8,4)

எனவும் கடவுளர் மூவர் என்றம், அம்மூவரிற் றிருமாலே சிறந்த கடவுள் என்றுங் கூறுகின்றார். உலகிற்கு முழு முதற்கடவுள் ஒருவரேயுளர் அல்லாமல், மூவர் உளராதல் யாங்ஙனம்? படைத்தற்றொழிலை நிகழ்த்துதற்கு ஒரு கடவுளும்,

காத்தற்றொழிலை நிகழ்த்துதற்கு மற்றொரு கடவுளும், அழித்தற்றொழிலை நிகழ்த்துதற்கு வேறொரு கடவுளுமாகக் கடவுளர் மூவர் உளராயிற், படைத்தற் றொழிலைச் செய்வோன் காத்தல் அழித்தல்களைச் செய்யமாட்டுவான் அல்லனெனவும், அங்ஙனமே காத்தல் அழித்தல்களைச் செய்வோரும் தத்தந் தாழிலையன்றிப் பிறதொழில்களைச் செய்யமாட்டுவா ரல்லரெனவுங் கொள்ளப்பட்டு, அவரெல்லாம் வரம்பிலாற் றலுடைய முழுமுதற் கடவுளாகா ரென்பது தானே பெறப்படும் அற்றன்று, திருமாலே தமக்குரிய காத்தற்றொழிலோடு ஏனையிரண்டு தொழில்களையும் புரிவரெனின்; நன்று சொன்னாய்,திருமாலே முத்தொழிலும் புரிபவராயிற், படைத்தல் அழித்தல்களுக்கு வேறிரு கடவுளரைக் கொண்டது எற்றுக்கு? அதுவேயுமன்றி, நாரணன் நான்முகன் அரன் என்னும் மூவரையுமே உள்ளத்து இருத்திப் பற்றறுத்தல் வேண்டுமென்பது போதர நம்மாழ்வார்,

“ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற

நன்றெழில் நாரணன் நான்முகன் அரன்என்னும் இவரை ஒன்றநும் மனத்துவைத்து உள்ளிநும் இருபசை யறுத்து”

(1,3,7)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/149&oldid=1588577" இலிருந்து மீள்விக்கப்பட்டது