உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 2

141

என்று கூறியதென்னை?ஒன்றென்றாவது பலவென்றாவது அறிதற்கரிதான வடிவுடையது யாது? அஃது இம்மூவரின் வேறா? ஒன்றா? வேறாயின், அஃது அம் மூவரின் மேற்பட்ட முழுமுதற் கடவுளாதல் வேண்டும். மற்று அஃது அம் மூவரோடு ஒன்றுபட்ட பொருளாயின், ஓர் அறிவுப் பொருள் மூவேறு அறிவு பொ ருளாகப் பகுக்கப்படுதல் யாங்ஙனம்? அறிவில்லாத பருப்பொருள்களே ஒன்று பலவாகப் பகுக்கப்படுதலைக் காண்டும். அவற்றைப் போலவே அறிவுப் பொருளும் ஒன்று பலவாகப் பகுக்கப் படுதலை யாண்டாயினுங் கண்டார் உளரோ? அல்லதூஉம், ஒன்றெனவாதல் பலவெனவாதல் அறிதற்கரிய பொருள், பின் மூன்றாயதை மட்டும் அறிவது யாங்ஙனங் கூடும்? அற்றன்று, ஒன்றெனப் பலவென அறிதற்கரிய முழுமுதற்கடவுள் யாண்டும் ஊடுருவி நிறைந்து எவற்றினும் மேற்பட்டதாய் நிற்க, அதனுள் நான்முகன் திருமால் உருத்திரன் என்னும் மூவரும் தனித்தனி நிற்பரெனின், “யானும் அறியேன் அவளும் பொய் சொல்லாள்” என்றபடி இம்மூவரும் முதல்வர் அல்லர், இம் மூவரின் வேறாய் எல்லாம் வல்லதாய் நிற்கும் முழுமுதற் கடவுள் பிறிதுஒன்று உண்டென்பது, நம்மாழ்வார் வாய்மொழியினா லேயே பெறப்படுகின்றதன்றோ? அவ்வாறு மூவரின் வேறாய் முழுமுதற் கடவுள் ஒன்றுண் டென்பதனை உடன்பட்ட நம்மாழ்வார் பின்னர் அதனை மறந்து, அம்மூவரில் ஒருவராய திருமாலையே முழுமுதற் கடவுளாகக் கொண்டு,

"தானோர் உருவே தனிவித்தாய்த்

தன்னில் மூவர் முதலாய

வானோர் பலரும் முனிவரும்

மற்றும் மற்றும் முற்றுமாய்த்

தானோர் பெருநீர் தன்னுள்ளே

தோற்றி அதனுட் கண்வளரும்

வானோர் பெருமான் மாமாயன்

வைகுந் தன்எம் பெருமானே

(1,5,40)

என்று இசைத்தது முன்னொடுபின் பெரிதும் முரணுறு தலைச்

சிறிதாராய்ச்சியுடையரும் நன்கறிவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/150&oldid=1588579" இலிருந்து மீள்விக்கப்பட்டது