உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

மறைமலையம் -23

இவ்வாறு முன்னொடுபின் முரண உரைநிகழ்த்திய நம்மாழ்வார், முழுமுதற்கடவுள் நிலையிற் றாம் உயர்த்து வத்த தம் திருமாலையே இறுகப்பற்றி, அவரது வழிபாட்டளவி லாவது உறைத்து நின்றனரோவென்றால் அதுவும் இன்று. சிவபிரானே முழுமுதற் கடவுள் என்பதை, மூன்றாம் ஆண்டில் அப் பிரானை நேரே கண்டு அவனருட்பால் உண்டு வளர்ந்த திருஞானசம்பந்தப் பிள்ளையார் தாம் சமணர் சாக்கியரோடு இட்ட வழக்குகளில் நன்கு நிலைநாட்டி யிருக்கின்றன ராகலின், அதனை நன்குஉணர்ந்த நம்மாழ்வார், தாம் சிவபிரான் வழிபாட்டைக் கைவிட்டால், தமக்கு இம்மையிற் பெருந்துன்பமும் மறுமையில் நிரயமும் வாய்க்குங்கொலென அஞ்சியே திருவாய்மொழியில்,

“அரிஅயன் அரன் என்னும் இவரை

எனவும்,

66

உணர்ந்துணர்ந் துரைத்துரைத் திறைஞ்சுமின்”

(1,3,6)

கடிகமழ் கொன்றைச் சடையனே யென்னும்."

(7.2.10)

‘பூத்தண் துழாய் முடியாய்புனை

6

எனவும்,

66

எனவும்,

கொன்றையஞ் செஞ்சடையாய்”

“என்மலைமகள் கூறன்றன்னை... எயின்மூன் றெரித்த வென்றுபுலன் துரந்த விசும்பாளியைக் காணேனோ”

எனவும்,

(7,6,3)

(7,6,7)

“மாயோனை முக்கணம்மானை நான்முகனை அமர்ந்தேனே” (8,4,10)

எனவும்,

“முனியே நான்முகனே முக்கண் அப்பா”

(10,10,1)

எனவும் முக்கட் பெருமானையும் இடை யிடையே வழுத்திக் கொண்டு சென்று, இறுதியில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/151&oldid=1588580" இலிருந்து மீள்விக்கப்பட்டது