உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

என்று

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

143

"அவாவறச் சூழ்அரியை அயனை அரனை அலற்றி அவாவற்று வீடுபெற்ற குருகூர்ச் சடகோபன்”

சிவபிரான்

(10.10.11)

முடித்துக்

திருப்பெயராலேயே கூறியிருக்கின்றார். புராண கதைகளை நம்பிக் கடவுளர் மூவர் உளர் என்றும், அவருட் றிருமாலே முதல்வராவர் என்றுங் கொண்டு நம்மாழ்வார் பெரிதுமயங்கி யிடர்ப் பட்டனராயினும், திருஞானசம்பந்தப் பிள்ளையார்க்கு மூன்றாண்டிலே தோன்றி யருள்செய்து, முதல்வனில்லை யெனப் பாழ்ங்கொள்கை பேசிய சமண சாக்கியரை அவர் வாயிலாக அடக்கித் திருத்தி யருள்புரிந்த சிவபிரான் முழுமுதற் கடவுளா யன்றிப் பிறிதாதல் செல்லாதென வரவரத்தெளிந்து துணிவு கொண்டே நம்மாழ்வார் ‘அரன் என்னுந் திருப்பெயரை முடிந்த நிலையாக வைத்துச் சொல்லித் தமது ‘திருவாய்மொழி'யை முடித்தாராகல் வேண்டுமென்பது நடுவுநின் றாராய்வார்க்கு விளங்கா தொழியாது. எனவே, நம்மாழ்வார் முழுமுதற்கடவுள் நிலையைத் தாமாகவே முழுதுணர்ந்து அதன் கண் மட்டும் உறைத்து நின்றவர் அல்லரென்பதூஉம், அதனால் அவர் திருஞானசம்பந்தப் பெருமானையாதல் மாணிக்கவாசகப் பெருமானையாதல் ஒத்த கடவுட்டன்மையுடைய ரல்லரென்பதூஉம் நன்கு போதரும்.

கு

மேலும், உலகிற்கு முதலாய் நிற்குங் கடவுள் அப்பனாகிய தானும் தன்னோடு பிரிப்பின்றி நிற்கும் அம்மையும் ஆய் ஒன்றும் இரண்டுமல்லா இரண்டற்ற நிலையில் ஆண்பெண் உருவாய்த், தீயும் நீரும் ஒப்பச், சிவப்பு நீலநிறங்களோடு கூடிநின்று, உலகத்தைப் படைத்துக்காத்து அழிக்கும் உண்மையினை முன்னரே வைத்து இனிது விளக்கிக் காட்டியிக்கின்றேம். ஈண்டும் சிறிது விளக்குவேம். உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களுந் தீயின் கூற்றிலும் நீரின் கூற்றிலும் அடங்கும். தீயும் நீரும் ஒன்றியைந்து நிற்குங்காறும் படைத்தல் காத்தல்கள் நிகழும்; தீ மிகுந்தவிடத்து நீரை உரிஞ்சி எல்லாப் பொருள்களையும் அழித்துவிடும். எனவே, படைத்தல் காத்தல்களைச் செய்வது தீயும் நீரும் சேர்ந்த சேர்க்கையே யாதலும்,அழித்தலைச் செய்வது தீ நீரிற் பிரிந்து மிகுதலே யாதலும் தெற்றென விளங்கும். விளங்கவே படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழிற்கும் ஏதுவாவன தீயும் நீரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/152&oldid=1588581" இலிருந்து மீள்விக்கப்பட்டது