உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

144

நீ

மறைமலையம் - 23

து

4

என்னும் பொருள்கள் இரண்டேயல்லாமல் மூன்றல்லாமையும் புலனாம். இத் தீயும் நீரும் அறிவில்லாப் பொருள்களாதலால் அவற்றை இயக்குதற்கு அறிவுடைய முதல்கள் இரண்டு இன்றியமையாது வேண்டப்படும். தீயினுள் விளங்கும் அறிவுடைப்பொருளே சிவம் என்றும், நீரினுள் விளங்கும் அறிவுடைப்பொருளே அம்மையென்றும் அறிவுநூல்கள் நுவலாநிற்கும். இவ்வாறு இவற்றுள் விளங்குதல் பற்றியே தீயின்நிறமான சிவப்புவடிவு சிவபிராற்கும், நீரின் நிறமான நீலவடிவு அம்மைக்கும உரியனவாகச் சொல்லப்பட்டன. குறித்தே இருக்குவேதத்துள்ளும் "த்வம் அக்நே ருத்ரோ (அக்கினி, நீ உருத்திரனாய் இருக்கின்றனை) என்னும் உரையும் எழுந்தது. 'உரு'வென்னுஞ் சொல்லுக்குச் 'சிவப்புநிறம் ‘வெப்பம்’, ‘அச்சம்’ என்னும் பொருள்கள் உண்மை, “உருவப் பல்பூத் தூஉய்,”5 “வெயில் உருப்புற்ற வெம்பால்”6 “உருஉட் காகும்”” என்னும் பழைய தமிழ்நூற் சொற்றொடர்களாற் புலப்படுதலிற், செம்மை நிறத்தை சினத்தையும் அச்சத்தையுந் தோற்றுவிக்கும். அழிப்புக் காலத்துச் சிவபெருமாற்கு ‘உருத்திரன்’ என்னுந் தமிழ்ச் சொல்லைப் பண்டை இருக்குவேதகாலத் தமிழர்கள் பெயராக அமைத்து வழங்குவாராயினர். எனவே, படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழிலையும் செய்வோர் அப்பனும் அம்மையுமாய்ப் பிரிவற்நிற்கும் முதல்வர் இருவரேயல்லாமல், மூவர் அல்லர். இவ்வுண்மை அம்மை யப்பரது விளக்கத்திற்கு இடனாய்நிற்கும் தீ நீரின் றொழில் களானுந் தெளியப்படும். தீ தனித்து எரியுங்கால் ஏதொரு பொருளும் அதன்முன் நிற்கலாற்றாது அழிந்துபடும். மற்று அது நீரொடு கலந்து தனது வெம்மை குறைந்து ஓர் அளவில் நிற்குங்கால், அது பல செயற்கருந் தொழில் களெல்லாம் செய்யவல்லதாகும். தீயும் நீரும் ஒருங்கு கலத்தலாற்றோன்றும் நீராவி பலவகைப் பொறிகளையும் இயக்கிப் பல்வேறு வியத்தகு தொழில்களெல்லாம் செய்தலை இஞ்ஞான்று உலகம் எங்கணும் காண்கின்றேம் அல்லேமோ? தீயின் சேர்க்கையின்றி நீர் உறைந்து பனிக்கட்டியாயவிடத்தும், நீரின் சேர்க்கையின்றித் தீயே மிக்கெழுந்து எல்லாவற்றையும் எரிக்குமிடத்தும் உலகின் கண் ஏதேனும் நடைபெறுமா? நடைபெறாதன்றே. உலகினும் உலகத்தில் இயங்கும் உயிர்களின் உடம்புகளினும் தீயும் நீருங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/153&oldid=1588582" இலிருந்து மீள்விக்கப்பட்டது