உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

145

கலந்துநிற்க வேண்டுமளவுக்குக் கலந்து நிற்றலினாற்றான் உலகுயிர்களின் தோற்றுமும் அவற்றின் நிலைபேறுங் காணப்படுகின்றன. ஆகவே, அம்மையப் பரப்பது சேர்க்கையே படைப்புக்குங் காப்புக்கும் ஏதுவாகு மல்லது, நான்முகனுந் திருமாலுந் தனித்தனியே அவை தமக்கு ஏதுவாகார் என்க.

அல்லதூஉம், உண்மையான் நுணுகிநோக்குமிடத்துப் படைப்பும் அழிப்பும் எனத் தாழில்கள் ரண்டே உளவல்லது, காப்பு என்பதொரு தனித்தொழில் தனியே நடைபெறுவதன்று.'படைப்பு' என்பது யாதென ஆராயுங் கால் ஐம்பொறிகளுக்கும் புலனாகா நுண்டுகள் ஒருங்கு சேர்க்கப்பட்டு அவ் வைம்பொறிகட்கும் புலனாகும் வடிவுடையவாமாறு ஆக்குவதேயாம்.” அழிப்பு' என்பது அங்ஙனந் திரட்டி வடிவாக்கப்பட்ட துகள்கள் வேறு வேறாகப் பிரிந்துபோமாறு பிரித்து விடுவதேயாம். நம்முடம்பினும் உலகத்தினும் இவ்விருவகைத் தொழில் களும் இடையறாது நடைபெறுகின்றன. நமதுடம்பு எண்ணிறந்த நுண்டுகள்களால் ஆக்கப்பட்டிருக்கின்றது. இத் துகள்கள் ஒவ்வோர் இமைப் பொழுதும் புதிய புதியவாய் நமதுடம் பின்கட் சேர்க்கப்பட்டு வராநிற்பப், பழைய துகள்கள் அங்ஙனமே ஒவ்வொரு நொடியும் பிரிந்து பிரிந்து நமதுடம்பை விட்டு அகன்றுபோகின்றன. இவ்வாறு புதிய துகள்கள் புதிய புதியவாய்த் திரட்டப்பட்டு நமதுடம்பின்கட் சேர்க்கப்பட்டு வருங்காறும் நமதுடம்பு இங்கு நிலைபெறும் மற்றுப் புதிய துகள்கள் அங்ஙனம் ஒவ்வொரு நொடியும் சேர்க்கப் படாமல் நின்றுபோகப், பழைய துகள்கள் ஓர் உடம்பினின்றும் கழிந்துகொண்டே போமாயின், அவ்வுடம்பு விரைவில் அழிந்துபோகும். இம்முறையால் ஆழ்ந்து நோக்குமிடத்துப் புதிய துகள்கள் இடையறாது படைக்கப்பட்டு வருதலே உடம்பு நிலைபெறுதற்கு ஏதுவாதல் விளங்கும். எனவே, இடையறாத படைப்புத் தொழிலே காத்தற் விளங்கும்.எனவே, றொழிலாகுமல்லாற், காத்தற்றொழிலென வேறொன்று தனியே யுண்மை ஒருவாற்றானும்பெறப்படமாட்டாது. அதனாற் காத்தற் றொழிலுக்குத் திருமாலென ஒரு தெய்வம் தனியே வேண்டுமெனக் கொண்டாரது கோட்பாடு சிறிதும் பொருந்தாது. படைத்தற்றொழிலைச் செய்யும் அம்மையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/154&oldid=1588583" இலிருந்து மீள்விக்கப்பட்டது