உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

மறைமலையம் - 23

காத்தற்றொழிலையுஞ் செய்பவளாவாள். மே மலும், காத்தற்றொழிலைத் தனியே தெய்வம் ஒன்று உளதெனக் காள்ளினும் வேறொருவராற் படைக்கப் பட்டதனையே அது காக்கவேண்டுதலானும், படைக்குந் தெய்வம் படைத்தற் றொழிலைச் செய்யாதாயிற் காக்குந் தெய்வங் காத்தற் றொழிலைச் செய்யமாட்ட ாமையானும், எவற்றையும் அழிக்குந்தெய்வம் ஒன்று உளதெனக் கோடல் வைணவர்க்கும் உடன்பாடாகலின் அவ் வழித்தற் றொழிலைச் செய்யுந் தெய்வத்தின் முற்காக்குந் தெய்வந் தன்றொழிலை எக்காலும் நடத்தல் இயலாமையானும், அன்றிக் காக்குந் தெய்வத்தின் முன் அழிக்குந் தெய்வத்தின் வலி செல்லா தெனின் அழித்தற் றொழிலே எக்காலும் நடைபெறாதாகல் வேண்டும் மற்று அஃது உலகின்கட் கண் கூடாய் நிகழக காண்டு மாகலின் அழித்தற் றெய்வத்தின் முன் காத்தற் றெய்வத்தின் க வலி நிற்க

லாற்றாமையானும் அங்ஙனம் காத்தற் றொழிலுக்கெனத் தனியேகொண்ட தெய்வம் முதன்மையும் ஆற்றலும் இல்லாதாய் ஒழிதல் வேண்டும். அவ்வாறொழியவே, திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொள்ளுங் கோள் ஒருவாற்றானும் ஒவ்வாதென்க. இவ்வாற்றால் அழித்தற் றொழிலைச் செய்யும் உருத்திரனே எல்லா ஆற்றலும் வாய்ந்த முழுமுதற் கடவுளாவன் கடவுளாவன் என்று தெளிக. இவ்வுண்மை தெரித்தற்கே சிவஞான சித்தியாரிலும்,

"இறுதியாங் காலந் தன்னில் ஒருவனே இருவ ருந்தம் உறுதியின் நின்றா ரென்னின் இறுதிதான் உண்டா காதாம் அறுதியில் அரனேஎல்லாம் அழித்தலால் அவனால்இன்னும் பெறுதும்நாம் ஆக்க நோக்கம் பேரதி கரணத்தாலே.’

என்னுந் திருப்பாட்டும் எழுந்தது. எல்லாம் வல்லோனாய் எல்லாவற்றையும் அழிக்கும் முதல்வனொருவனே, எல்லாம் அழிந்தொழிந்த இறுதிக்காலத்தில் எஞ்சிநிற்பவனாகலின், திரும்பப் படைப்பு நிகழவேண்டியக்கால் அஃது எஞ்சிநிற்கும் அவ்வுருத்திரன்மாட் டிருந்தே தோன்றுமென்பதும் பெற்றாம். பெறவே, படைப்பும் அழிப்பும் அவற்றிடையே நிகழும் காப்பும் என்னும் முத்தொழிற்கும் உரிய முதல்வன் உருத்திரன் ஒருவனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/155&oldid=1588584" இலிருந்து மீள்விக்கப்பட்டது