உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

யாதலுந்

-

147

தானே பெறப்படும். இவ்வுண்மையெல்லாம் 'சிவஞானபோதம்', 'சிவஞானசித்தி' என்னும் அறிவு நூல்களிலும் அவற்றின் உரைகளிலும் நன்கு விவரித்துரைக்கப்பட்டிருத்தலின், அவற்றையே ஈண்டு மீளவிரித்தல் வேண்டா.

இனி, மேலே காட்டியவாற்றால் முழுமுதற் கடவுள் அப்பனும் அம்மையுமாய் நிற்குமியல்பும், அதுவே முத்தொழில்களைப் புரியுமாறும் இனிது தெளியக்கிடந் தமையின், அம் முழுமுதற்கடவுளை நேரே காணும் பெறற்கரும் பேறுபெற்ற மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர் முதலான அருட்டிருவாளர் களெல்லாம் அம்முழுமுதற் கடவுளைப், புராண கதைகளுட் சொல்லப்பட்ட நான்முகன் திருமால் காலஉருத்திரன் என்னும் மூவர்க்கும் மேற்பட்ட அம்மையப்பராகவே வைத்து ஓதி வழுத்துவரல்லது, அம் மூவரில் ஒருவராகக் கொண்டு வழுத்துதற்கு ஒருசிறிதும்

ஒருப்படுவாரல்லர். இது,

.

“மூவரும் முப்பத்துமூவரும் மற்றொழிந்த தேவருங் காணாச் சிவபெருமான்”

என்றற்றொடக்கத்து அவர்தம் அருளுரைகளால் நன்கு தெளியப்படும். இவ்வுண்மையினை “மாணிக்காவாசகர் வரலாறு”100 ஆம் பக்கம் முதல் 101 ஆம் பக்கம் வரையிலும் எடுத்துக் காட்டியிருக்கின்றோம். அங்ஙனமே திருஞான சம்பந்தப் பிள்ளையார்,

6

“முத்தியாய் மூவரின் முதல்வனாய் நின்றவன்”

எனவும்,

(திருமழபாடி)

“மூவரிலும் முதலாய் நடுவாய மூர்த்தியை" (திருப்பாச்சிலாச்சிராமம்) எனவும், திருநாவுக்கரசு நாயனார்,

“முந்தையார் முந்தியுள்ளார் மூவர்க்கு முதல்வரானார்”

எனவும்,

(திருவிடைமருதூர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/156&oldid=1588585" இலிருந்து மீள்விக்கப்பட்டது