உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

66

மறைமலையம் - 23

‘மூவுருவின் முதலுருவாய் இருநான்கான

மூர்த்தியே யென்று முப்பத்துமூவர்

தேவர்களும் மிக்கோருஞ் சிறந்து வாழ்த்துஞ்

செம்பவளத் திருமேனிச் சிவனே

(பொது)

எனவும்,

“சென்றுநாஞ் சிறுதெய்வஞ் சேர்வோம் அல்லோம் சிவபெருமான் றிருவடியே சேரப் பெற்றோம்”

(பொது)

எனவும், சுந்தரமூர்த்தி நாயனார்,

66

“முந்தி யாகிய மூவரின் மிக்க

மூர்த்தி யைமுதல் காண்பரி யானை”

(திருவாழ்கொளிபுத்தூர்)

எனவும் அருளிச் செய்தமை காண்க. எனவே, சைவசமய ஆசிரியர்களாற் 'சிவன்' ‘உருத்திரன்' என்னும் பெயர்களால் வைத்து வணங்கப்பட்டது முழுமுதற் கடவுளே யல்லாமற், புராணகதைகளுட் சொல்லப்பட்ட மூவரில் ஒருவரான காலஉருத்திரர் அன்று.

னிச், சைவசமயாசிரியர்க்கு முன்னிருந்த சைவ சமயச் சான்றோர்களால் வணங்கப்பட்டு வந்ததூஉம் முழுமுதற் கடவுளே யென்பதற்கு, அம் முழுமுதலுக்குப் பேரிலக்கண மாயுள்ள பிறவாமை இறவாமையாகிய தன்மைகளே சிவபிராற்கு உரியனவாகப் பழைய நூல்களுள் ஓதப்படுதலே சான்றாம். “பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்” என்று 'சிலப்பதிகாரத்'திலும் போந்தமை காண்க. சிவபிரான் முழுமுதற் கடவுளாதல் பற்றியே பண்டை நாளிருலிருந்த தமிழ்ச் சான்றோர்கள் முதலிற் சிவபெருமான் றிருக்கோயிலையும், அதன்பின்னர் ஏனைத் தெய்வங்களின் கோயில்களையும் வைத்து வழிபட்டு வந்தனர். இஃது,

8

“ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும், கடல்வளர் புரிவளை புரையு மேனி

அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்,

மண்ணுறு திருமணி புரையு மேனி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/157&oldid=1588586" இலிருந்து மீள்விக்கப்பட்டது