உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2 விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும், மணிமயில் உயரிய மாறா வென்றிப் பிணிமுக ஊர்தி ஒண்செய் யோனும்என ஞாலங் காக்குங் கால முன்பிற்

றோலா நல்லிசை நால்வ ருள்ளும்”

149

என்று ‘புறநானூற்'றிற் சிவபெருமான் முதற்கண் வைத்து ஓதப்பட்டமை காண்க. இவ்வாறே 'சிலப்பதிகாரத்' திலும்,0 ‘மணிமேகலை'யிலும்" சிவபிரானும் அவன் றிருக்கோயிலும் ஏனை எல்லாத் தெய்வங்களுக்கும் அவர் தங்கோயில்கட்கும் முன்வைத்து உரைக்கப்படுதலும் உணரற்பாற்று.

பிறந்திறப்பனவெல்லாம்

ச்

எனவே, சிற்றறிவுடைய உயிர்களாதலும், அவ் வுயிர்கட்குப் பல்வேறு உடம்புகளைத் தந்து அவை தம்மைப் பிறவிவட்டத்தில் வைத்துச் சுழற்றி அவற்றிற்கு அறிவுவளரச் செய்யும் முதல்வன் பிறப்பு இறப்புக்கள் இல்லாத தூய பேரறிவினனாதலும் பண்டை செந்தமிழ் நூலாசிரியர் மெய்யுரைகளால் இனிது விளங்காநிற்கின்றன. அப் பண்டையோர் மெய்ம் மரபின் வழிவந்த சைவசமயாசிரியர்களும் பிறப்பு இறப்பு இல்லாத் தனிப்பெருங் கடவுளையே 'சிவன்' 'உருத்திரன்' என வைத்து வழிபட்டனர் என்பதற்குப், பிறப்பு இறப்பு இல்லாத் தனி முதன்மையே அப் பெருமானுக்குரியதாக அவர் அடுத்தடுத்து எடுத்துக் கூறுதலே சான்றாம். மாணிக்கவாசகப் பெருமான், "யாவர்க்குந் தந்தைதாய் தம்பிரான் தனக்கு அஃதிலான்”

எனவும்,

“துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காந்

தொடக்கெலாம் அறுத்தநற் சோதீ,

இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

எனவும், திருஞானசம்பந்தப்பெருமான்,

“பிறப்பில் பெருமான் திருந்தடிக்கீழ்ப் பிழையாத வண்ணம்'

(திருச்சதகம், 47)

,,

(பிடித்தபத்து, 10)

(பொது)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/158&oldid=1588587" இலிருந்து மீள்விக்கப்பட்டது